ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது. டார்க் காமெடி வகை படங்களுக்கு பெயர்போன இளம் இயக்குநரான நெல்சன் உடன் முதன்முறையாக ரஜினி கூட்டணி அமைத்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்பை எகிர வைத்துள்ளது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள், சமீபத்திய ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி என அனைத்திலும் ‘ஜெயிலர்’ ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நம்பிக்கையை கொடுத்து வருகிறது. அதிலும் இன்று மாலை வெளியான படத்தின் ஷோகாஸ் டிரைலர் அனைத்து தரப்பினரையும் குஷிப்படுத்தியுள்ளது.
இதனிடையே ஜெயிலர் ஒரு பான் இந்தியா படம் இல்லை என படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா கூறியிருப்பது வைரலாகி வருகிறது. அவர், பான் இந்தியா படம் என்ற எண்ணத்தோடு யாரும் ஜெயிலரை பார்க்க வேண்டாம். இது கமர்ஷியல் எண்டர்டெயிண்மெண்ட் படமாக உருவாகியுள்ளது.
இதை உங்களுக்கான படமாக பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட படக்குழுவினரோ என்னம்மா பான் இந்தியா படத்திற்கு இணையாக புரொமோஷன் செய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படி செய்துவிட்டீர்களே என்று முணுமுணுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். தமிழில் எடுக்கப்பட்ட ஜெயிலர் படம் இம்மாதம் 10ஆம் தேதி தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.





