நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி படத்தில் சோபனா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பையா, தோழா, சுறா, படிக்காதவன், வீரம் உள்ளிட்ட பல படங்களில் தமன்னா நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர் இந்தி படவுலகம் பக்கம் சென்றார்.
இந்தியில் மிக தாராளமான கவர்ச்சியில் நடித்தார். குறிப்பாக முத்தக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் தமன்னா தாராளமாக நடித்த நிலையில், அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன. இதற்கிடையே வெப் சீரிஸ் ஒன்றில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். குறிப்பாக வருண் சர்மா என்பவருடன் உதட்டு முத்தக்காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கதி கலங்க வைத்தார்.
தமன்னா விளம்பர படங்களில் நிறைய நடிக்கிறார்.இதற்கிடையே தமிழில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவலா பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி, இன்னும் பெரிய அளவில் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா, இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரிமியர் லீக் கிரிக்கெட் நடந்த போது மகாதேவ் செயலியில், அந்த கிரிக்கெட் போட்டிகளை தமன்னா ஒளிபரப்பு செய்ததாக தெரிய வருகிறது. சட்டவிரோதமாக அவர் ஒளிபரப்பு செய்தார் என்று தமன்னா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளை நடத்த ஏற்கனவே உரிமம் பெற்ற நிறுவனம், இதனால் பலத்த இழப்பீட்டை சந்தித்ததாக கூறப்படுகிறது போலீசில் அவர்கள் புகார் அளித்த நிலையில் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி தமன்னா, இந்த புகார் தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது





