- Advertisement -
Homeபொழுதுபோக்குவாட்டர்மெலன் திவாகர் சொல்றது எல்லாமே பொய்… அதை நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு - பிக்பாஸ்...

வாட்டர்மெலன் திவாகர் சொல்றது எல்லாமே பொய்… அதை நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு – பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரஜின் ஆவேசம்!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதில் பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது கானா வினோத் சாண்ட்ரா திவ்யா கணேஷ் அரோரா விக்கல்ஸ் விக்ரம் சபரிநாதன் ஆகிய 6 பேர் பைனலிஸ்ட்டுகளாக உள்ளனர்.

இந்த சூழலில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதே சீசனில் கலந்துக்கொண்டு எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சில தினங்களாக வந்தபடி உள்ளனர். முதலில் வியானா வந்தார். அதன்பிறகு வாட்டர்மெலன் திவாகர் பிரவீன் காந்தி வந்தனர். அதன்பிறகு பிரவீன் ராஜ் வந்தார். அதைத் தொடர்ந்து அப்சரா ரம்யா ஜோ வந்தனர்.

- Advertisement -

கடைசியாக பிக்பாஸ் வீட்டுக்குள் கெமி வந்திருக்கிறார். இனி துஷார் சுபிக்‌ஷா ஆதிரை எஃப்ஜே கனி அமித் பார்கவ் பிரஜின் கலையரசன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளனர். அதனால் வீட்டுக்குள் இப்போதைய போட்டியாளர்கள் முன்னாள் போட்டியாளர்கள் என களை கட்டியுள்ளது.

ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட கம்ருதீன் பார்வதி மீண்டும் வர மாட்டார்கள் என்ற நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள வாட்டர்மெலன் திவாகர் திவ்யா கணேஷின் பின்னால் சுற்றி வருகிறார். இதற்கிடையே பார்வதிக்கு ஆதரவாக பேசிய திவாகர் சாண்ட்ரா குறித்து சில எதிர்மறை கருத்துகளை வெளியில் இருந்த போது பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரஜின் கூறியதாவது, திவாகர் ஒன்றும் நல்லவர் கிடையாது. அவர் தனக்கு 38 வயசுன்னு சொன்னார். ஆனால் அவருக்கு 38 வயசு இல்லே. அதே மாதிரி கல்யாணம் ஆகாதவன்னு சொல்லிட்டு இருக்கார். ஆனா இரண்டு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகி அவருக்கு ரெண்டு பசங்களே இருக்காங்க. இதுக்கெல்லாம் என்கிட்ட ஆதாரமே இருக்கு.

இவரெல்லாம் தகுதி தராதரம் பற்றி பேசலாமா? நான் மட்டும் உள்ள போனா அவருக்கு தான் பேட் டைம். நான் உள்ள போனா எல்லாத்தையும் ஆதாரத்தோடு சொல்லுவேன் என்று நடிகர் பிரஜின் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் தனது மனைவி சாண்ட்ரா குறித்து பேசிய திவாகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவாரா பிரஜின் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்