கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 துவங்கியது. நேற்று ஜனவரி 18ம் தேதி 105 நாட்களை கடந்த நிலையில் இறுதிகட்டத்தை நிறைவு செய்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் வெற்றி பெற்றார். அடுத்து 2ம் இடத்தில் ரன்னராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டார்.
கடந்த முறை 8வது சீசனிலும் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதே போல் இந்த 9வது சீசனினும் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த திவ்யா கணேஷ்தான் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் திவ்யா கணேஷ் வின்னர் ஆனது 3 பேர் வெற்றியாளர் வாய்ப்பை தவற விட்டதால்தான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த சீசனை பொருத்த வரை ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் பார்வதி தான். அவர்தான் பல நேரங்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் அட்ராசிட்டி செய்து நிகழ்ச்சியை காணும் ஆர்வத்தை பார்வையாளர்களிடம் தூண்டினார். அதே போல் கம்ருதீனும் பல டாஸ்க்குகளில் நன்றாக விளையாடினார்.
அவர்கள் இருவரையும் விட இந்த சீசனில் மிகவும் இயல்பான ஒரு மனிதராக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் கானா வினோத் தான். பல நேரங்களில் அவரது டைமிங் காமெடி பலரையும் ரசிக்க வைத்தது. ஆனால் பணப்பெட்டி டாஸ்க்கில் அவர் செய்த தவறு டைட்டில் வின்னர் வாய்ப்பை தவற விட்டுவிட்டார். நியாயமாக அவர்தான் டைட்டில் வின்னராக இருந்தவர் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட திவ்யா கணேஷூக்கு 50 லட்சம் ரொக்க பரிசு, அதுபோக 70 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்ததற்காக சம்பளம் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி விளம்பரதாரர் வழங்கும் ஒரு விலை உயர்ந்த சொகுசு காரும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளரை வின்னராக அறிவிப்பதே முரண்பாடுதான். அதுவும் பரிசுத்தொகை, சம்பளம் என பெரிய தொகையை அவருக்கு தூக்கி தரும்போது சொகுசு கார் பரிசையாவது 2வது இடம் பிடித்த ரன்னருக்கு வழங்க வேண்டும். இந்த சீசனின் 2ம் இடத்தில் வெற்றி பெற்ற சபரிநாதனுக்கு தான் அந்த கார் வழங்கப்பட்டிருக்க வேண்டும். கார் டாஸ்க்கில் அவரது வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே இறங்கி ஓடி வந்த அவருக்கு காரை பரிசாக தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இனிமேல் ரன்னருக்கு கார் பரிசை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





