- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள படங்களின் வெற்றிகளை அடித்து நொறுக்குமா தமிழ் சினிமா? - தமிழில் மே மாதத்தில் சரவெடியாக...

மலையாள படங்களின் வெற்றிகளை அடித்து நொறுக்குமா தமிழ் சினிமா? – தமிழில் மே மாதத்தில் சரவெடியாக களம் இறங்கும் டாப் ஹீரோக்கள் படங்கள்

- Advertisement -

இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவுக்கு எப்போதுமே கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இங்குதான் ஜாம்பவான் டைரக்டர்களும், நடிகர்களும் இருக்கின்றனர் என்பது பலரும் வெளிப்படையாக சொல்லி வியந்த உண்மைகள்தான். பாலுமகேந்திரா, மகேந்திரன், கே பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், வெற்றிமாறன், பாலா, அமீர், ஏஆர் முருகதாஸ் என கவனிக்கப்படும் படைப்பாளிகள் இங்கு இருக்கின்றனர்.

அதே போல் நடிப்பில், புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி என மிகவும் கலைத்திறன் மிக்க நடிகர்களும் தமிழ் சினிமாவில்தான் இருக்கின்றனர். பல ஜாம்பவான்களை கொண்ட தமிழ் சினிமா மீது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படவுலகில் எப்போதுமே தனி மரியாதை இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க, பெரிய வரவேற்புக்குரிய தமிழ் படங்கள் எதுவுமே வரவில்லை. கிட்டத்தட்ட 100 படங்கள் வரை, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை புதுப்படங்கள் ரிலீசான நிலையில், ஒரு படம் கூட பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

குறிப்பாக ரஜினி நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் என எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எல்லாமே ஏமாற்றத்தை பரிசளித்தன. வசூல் அதிகரித்தாலும், ரசிகர்களால் அந்த படங்கள் கொண்டாடப்படவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான ஆடுஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், பிரமேலு போன்ற மலையாள படங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, 3 படங்கள் 100 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்துள்ளன.

இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமான வரும் மே மாதத்தில் தனுஷின் 50வது படம் ராயன், விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, பா ரஞ்சித் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தங்கலான் என 3 படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன.

தொடர்ந்து ரஜினி நடித்து வரும் வேட்டையன், விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி, கமல் நடித்துவரும் இந்தியன் 2, சூர்யா நடித்துள்ள கங்குவா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. இந்த மெகா ஸ்டார்களின் படங்கள் வந்தால்தான், மலையாள படங்களின் வெற்றி அடித்து நொறுக்கப்பட்டு, தமிழ் சினிமா படைப்பாளிகளின் படங்களும் வேற லெவலில் சம்பவம் செய்பவை என்பதை நிரூபிக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

சற்று முன்