- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இந்த படங்கள் எல்லாம் அவங்க பார்வையில் படவே இல்லையா? - 72வது தேசிய விருது...

அட இந்த படங்கள் எல்லாம் அவங்க பார்வையில் படவே இல்லையா? – 72வது தேசிய விருது லிஸ்ட்டில் காணாமல் போன சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

- Advertisement -

இந்திய அரசு சார்பில் கடந்த 1954ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர்கள் நடிகைகள் சிறந்த இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர் சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் சிறந்த படைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான கேப்டன் மில்லர் ராயன் அமரன் மெய்யழகன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் நடித்த படங்களுக்கு மட்டும் 3 விருதுகள் தரப்பட்டுள்ளது.

- Advertisement -

அதே போல் அமரன் படத்துக்கு 3 விருதுகள் மெய்யழகன் படத்துக்கு ஒரு விருதும் தரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான சி முக்கிய படங்கள் மிகப்பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் அந்த படங்கள் எல்லாம் இந்த தேர்வுக்குழுவின் தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

குறிப்பாக அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்துக்கு எந்த ஒரு பிரிவிலும் தேசிய விருது கிடைக்கவில்லை. அதேபோல் ஜமா என்ற படமும் விருதுக்கு தகுதியான படமாக இருந்தது. இயக்குனர் பாரி இளவழகன் இயக்கிய இந்தப் படமும் தேசிய விருதுக்கு தேர்வாகவில்லை. அதேபோல் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சீயான் விக்ரமுக்கு தங்கலான் படத்துக்கும் விருது அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

அதேபோல் சிறந்த சமூக கருத்தை கொண்ட வேட்டையன் கருடன் குரங்கு பெடல் கொட்டுக்காளி திரு மாணிக்கம் பைசன் வாழை போன்ற படங்களும் லிஸ்ட்டில் இடம்பிடிக்கவில்லை. மேலும் டிமான்டி காலனி 2 டிராகன் வணங்கான் என நல்ல கருத்துக்களைக் கொண்ட படங்களாக இருந்தன. இந்த படங்கள் எதுவுமே எந்த ஒரு பிரிவிலும் தேசிய விருது தகுதியானதாக தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தேசிய விருது என்பது நல்ல திரைப்படங்கள் தேர்வு செய்து அளிப்பது மட்டுமின்றி மக்களுக்கு பிடித்தமான படங்களாகவும் அது இருந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் கேப்டன் மில்லர் ராயன் மெய்யழகன் போன்ற படங்களை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் அந்த படங்களை எதிர்மறையாக தான் விமர்சித்தனர். அப்படிப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் கொண்டாடிய படங்களுக்கு தேசிய விருது எந்த பிரிவிலும் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்