- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையை வாங்கியிருப்பது இவரா? இப்படி ஒரு உள்குத்து வேலை...

தி கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையை வாங்கியிருப்பது இவரா? இப்படி ஒரு உள்குத்து வேலை நடந்துருச்சா? – எல்லாமே பிஸினஸ்தானா சித்தப்பு?

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்).நடிகர் விஜய் 3 ரோல்களில் நடித்துள்ள இந்த படம், விநாயகர் பண்டிகையை முன்னிட்டு, வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.75 கோடிக்கு ஜீ டிவி வாங்கியுள்ளது. முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையும், அதன்பிறகு மீதி தொகையை 16 மாதங்களில் 16 தவணைகளில், தயாரிப்பு நிறுவனத்துக்கு செலுத்தவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஜீ டிவி, தி கோட் படத்தின் இந்தி வெர்சனையும் சேர்த்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல், தி கோட் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக்கொள்ள ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், படத்தை வாங்கிக்கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகுதான், படத்தை வாங்கிக்கொள்வோம் என்ற புதிய நிபந்தனையை விதித்து, படக்குழுவினரையும், தயாரிப்பு நிறுவனத்தையும் திக்குமுக்காடச் செய்துள்ளது.

இதற்கிடையே தி கோட் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, தியேட்டர் உரிமையை யார் வாங்குவது என்ற குழப்பமான நிலை ஏற்பட்டது. ஏனென்றால் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து நிற்க போகிறார். இப்போது விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில், தி கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை வாங்கும் பட்சத்தில் தேவையற்ற சிக்கலில் சிக்க நேரிடுமே என பலரும் அச்சப்பட்ட நிலையில், புரடியூசர் ராகுல் என்பவர் வாங்கியிருக்கிறார். இவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த செண்பகமூர்த்தியின் ஆதரவாளர், அவரது செல்லப்பிள்ளை போன்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது.

இந்த ராகுல்தான் இப்போது, விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாக, ரெட் ஜெயின்ட் மூவீஸ் மூலமாக தான், இவர் தி கோட் படத்தை வாங்கி, தனது தயாரிப்பு நிறுவனம் பெயரில், தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் தி கோட் படத்தை திரையிடுகிறார் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆக, அரசியல் வேறு, பிஸினஸ் வேறு என்பதை இரு தரப்புமே ரசிகர்களுக்கு தெளிவாக புரிய வைத்துவிட்டனர்.

- Advertisement -

சற்று முன்