- Advertisement -
Homeபொழுதுபோக்கு69 வயதில் தெலுங்கு சூப்பர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை - அடேங்கப்பா என அசந்து...

69 வயதில் தெலுங்கு சூப்பர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை – அடேங்கப்பா என அசந்து போன ரசிகர்கள் – இதெல்லாம் வேற லெவல் சம்பவம்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போல், மலையாள சினிமாவில் மோகன்லால், மம்முட்டி போல் தெலுங்கு சினிமாவில் மிக முன்னணி நடிகராக முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். தமிழிலும் சில படங்களில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். ரஜினி நடித்த ராணுவவீரன் படத்தில் வில்லனாக சிரஞ்சீவி நடித்திருப்பார்.

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்தது நடிகர் சிரஞ்சீவிதான். அமலா, ஸ்ரீவித்யா, ராஜா, ஜெய்சங்கர், திலீப், வினுசக்ரவர்த்தி, எஸ்எஸ் சந்திரன் போன்றோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. இதே மாப்பிள்ளை என்ற படத்தில் பல ஆண்டுகளுக்கு பின், தனுஷ், ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மாப்பிள்ளை படத்தில் தயாரித்த நடிகர் சிரஞ்சீவி, இந்த படத்தில் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். ரஜினிக்கும் அமலாவுக்கும் கோவிலில் திருமணம் நடக்கும். அந்த காட்சியில் அவர்களது திருமணத்தை தடுக்க வரும் ஆட்களை, நடிகர் சிரஞ்சீவி அடித்து துரத்துவார். பிறகு மணமக்கள் ரஜினி, அமலாவுக்கு வாழ்த்து சொல்வது போல காட்சி இருக்கும்.

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவிக்கு தற்போது 69 வயது ஆகிறது. எனினும் 69 வயதிலும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன் ராம்சரண் தயாரிக்கும் படங்களிலும் அவ்வப்போது சிரஞ்சீவி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

- Advertisement -

சிரஞ்சீவி மகன் ராம்சரனும் வளர்ந்து வரும் நடிகராக தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆருடன் அவர் நடித்த ஆர் ஆர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் தமிழ்பட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். அந்த படம் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிரஞ்சீவிக்கு இப்போது கின்னஸ் உலக சாதனை நிறுவனம் சாதனை படைத்ததற்காக பாராட்டி அவர்கள் அவருக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நட்சத்திரமாக நடிகர் சிரஞ்சீவியை தேர்வு செய்த கின்னஸ் சாதனை அமைப்பு அவரை கௌரவித்திருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி 143 படங்களில் 537 பாடல்களுக்கு நடனமாடி உள்ளார் அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பதுதான் தற்போது கின்னஸ் சாதனையாக பாராட்டப்படுகிறது. இந்தியத் திரையுலகில் மிகச் சிறந்த நட்சத்திரம் என்ற சான்றிதழ் நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்