- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்ற மாநிலங்களில் ரிலீஸ் இல்லை - தமிழ்நாட்டில் மட்டுமே ரிலீஸ் ஆன தாய்கிழவி படம்… படக்குழு...

மற்ற மாநிலங்களில் ரிலீஸ் இல்லை – தமிழ்நாட்டில் மட்டுமே ரிலீஸ் ஆன தாய்கிழவி படம்… படக்குழு எடுத்த முக்கிய முடிவு – இது வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய்கிழவி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் பவுனுத்தாயி கேரக்டரில் ராதிகா சரத்குமார் திரையில் வாழ்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

மேலும் இந்த படத்தில் பவுனுத்தாயி மகன்கள் கேரக்டரில் அருள்தாஸ் சிங்கம்புலி மற்றும் பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் முனீஷ்காந்த் ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோரும் சிறந்த நடிப்பை தந்திருக்கின்றனர். நேற்று முன்தினம் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 360 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸானது.

- Advertisement -

ஆனால் தாய்கிழவி படம் கேரளா மற்றும் ஆந்திரா கர்நாடகா என பிற மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை. அதே போல் வெளிநாடுகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ஏனெனில் இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் சம்பவங்களை உள்ளடக்கியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடக்கும் கதைக்களத்தில் படத்தின் கதையோட்டம் உள்ளது. கிராமத்தில் காதில் தண்டட்டி அணிந்த பவுனுத்தாயி கேரக்டரில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் கதைக்களம் எல்லாமே தமிழ்நாட்டு மக்களுக்குதான் பரிச்சயமானதாக உள்ளது. மற்றபடி இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற கதைக்களம் அல்ல.

- Advertisement -

கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் வயதான பெண்கள் தாய்கிழவி போன்ற கெட்டப்பில் இப்படி இருக்க மாட்டார்கள். அதனால் நேட்டிவிடி சார்ந்த வகையில் இந்த கதைக்களம் அந்த மாநிலங்களில் ரசிகர்களிடம் பெரிய கவனமும் வரவேற்பும் பெறாது என்பதால் தமிழ்நாட்டில் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்து வெளியிட்டுள்ளது.

தாய்கிழவி படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் இதே கதையை ரீமேக் செய்து தாய்கிழவியாக பவுனுத்தாயி கேரக்டரில் மீண்டும் ராதிகா சரத்குமாரை நடிக்க வைக்க உள்ளனர். அவரது மகன்களாக நடித்த அருள்தாஸ் சிங்கம்புலி பாலசரவணன் போன்ற கேரக்டர்களை தெலுங்கில் பிரபலமாக உள்ள நடிகர்களை நடிக்க வைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்