- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜீத்குமார் பேச்சை அலட்சியப்படுத்திய டைரக்டர், பிடிவாதம் காட்டிய அவரால் நடந்த சம்பவம் -...

விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜீத்குமார் பேச்சை அலட்சியப்படுத்திய டைரக்டர், பிடிவாதம் காட்டிய அவரால் நடந்த சம்பவம் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் 62வது படமாக விடாமுயற்சி உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், வரும் ஜனவரி இறுதி வரை இந்த ஷெட்யூல் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு 3ம் கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. அஜர்பைஜானை அடுத்து துபாயில் ஷூட்டிங் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

விடாமுயற்சி படத்தை பொருத்தவரை ஹாலிவுட் படம் அளவுக்கு மேக்கிங் இருக்கும் என்று கூறப்படுகிறது. காணாமல் போன வில்லன் குரூப்பில் சிக்கிக் கொள்ள அவரை விடாமுயற்சியாக தேடிப்பிடித்து காப்பாற்றி மீட்டுவரும் ஹீரோவின் கதைதான் இது. என்றாலும், படத்தின் திரைக்கதையும், ஒளிப்பதிவும்தான் படத்தை வேற லெவலில் கொண்டு செல்லும். அதுதான் வெற்றியை தீர்மானிக்கும்.

- Advertisement -

ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் படங்களை பொருத்தவரை இயக்குநர்கள் ஹீரோக்களின் இயக்குநர்களாக இருக்க வேண்டும். அதாவது ஹீரோக்கள் விரும்புகிற கதையை, அவர்கள் விரும்புகிற வகையில் காட்சிகளை உருவாக்கி தர வேண்டும். வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே அவர்களது விருப்பம்தான். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகை நயன்தாராவும் வந்துவிட்டார்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி துவங்கியது. டிசம்பர் 10ம் தேதி வரை முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அதன்பிறகு சென்னை வந்த படக்குழு திரும்ப அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றது. அஜர்பைஜானில் மணல் புயல் ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு ஒரு வாரம், 10 நாட்கள் வரை இடைவெளி விடப்பட்டதாக கூறப்பட்டது. இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

விடாமுயற்சி முதல்கட்ட படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் நீரவ்ஷா. 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்தபோது ஒளிப்பதிவாளராக நீர்வ்ஷாவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ் இருந்தார். இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நீரவ்ஷா சிறந்த ஒளிப்பதிவாளராக பல விருதுகளை பெற்றவர். நீண்ட அனுபவசாலி. கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட அஜீத் படங்களில் தொடர்ந்து பணியாற்றியவர்.

அஜீத்குமாருக்கு வேண்டப்பட்ட ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா இருப்பது இயக்குநர் மகிழ்திருமேனிக்கு பிடிக்கவில்லை. சில நேரங்களில் நீரவ்ஷாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்பாராம் அஜீத். இதனால் அடிக்கடி டைரக்டர், ஒளிப்பதிவாளர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த கேமராமேன் வேண்டாம் என டைரக்டர் திருமேனி வெளிப்படையாக சொல்லிவிட, அவருக்கு பதிலாக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது அஜீத்குமாருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்திய நிலையிலும், வேறு வழியின்றி படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்