- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்தில் இந்திராணி கேரக்டரில் நடித்த நடிகை திரிஷா… இணையத்தில் எழுந்த கடும் விமர்சனத்துக்கு பதிலடி...

தக்லைஃப் படத்தில் இந்திராணி கேரக்டரில் நடித்த நடிகை திரிஷா… இணையத்தில் எழுந்த கடும் விமர்சனத்துக்கு பதிலடி தந்த நடிகர் எஸ்வி சேகர்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் சிம்பு திரிஷா அபிராமி உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் நாசர் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

கமல் மணிரத்னம் இருவரும் நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகளாக மீண்டும் இணைந்து படம் பண்ணவில்லை. அதனால் தக்லைஃப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த படத்துக்கு போதிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

- Advertisement -

அதிலும் இந்திராணி என்ற கேரக்டரில் சிம்புவின் காதலியாகவும், கமலின் நெருங்கிய அந்தரங்க தோழியாகவும் நடித்துள்ள திரிஷாவின் நடிப்பை ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷாவை கௌரவமாக நடிக்க வைத்த மணிரத்னம் தக்லைஃப் படத்தில் திரிஷாவின் இமேஜை மொத்தமாக டேமேஜ்ங செய்துவிட்டதாக ரசிகர்கள் வசைபாடி உள்ளனர்.

கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக மணிரத்னம், கமல்ஹாசன் சொன்னபடி எல்லாம் நடித்து இப்படி திரிஷா தன் மீது ரசிகர்களுக்கு இருந்த மரியாதை எல்லாம் கெடுத்துக்கொண்டார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. அஜீத்குமாருடன் திரிஷா நடித்த விடாமுயற்சி படத்திலும் கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பதாக திரிஷா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இணையத்தில் ஒரு ரசிகர், திரிஷாவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் கணவரை விட்டுவிட்டு இன்னொருவரை காதலிப்பது, கணவருடன் கோபித்துக்கொண்டு செல்வது, கள்ளக்காதலியாக நடிப்பது ஏன்? இதுபோன்ற கேரக்டர்கள் உங்களை தேடி வருகிறதா? அல்லது நீங்களே இப்படிப்பட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்த பதிவை தனது வலைதள பக்கத்தில் டேக் செய்து நடிகர் எஸ்வி சேகர் ஒரு பதிலை அதில் தந்திருக்கிறார். அதில் நடிகர் எஸ்வி சேகர் கூறுகையில், திரிஷா எப்படி நடிக்க வேண்டும், யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்கிற உரிமை யாருக்கும் இல்லை. பிடித்தால் பாருங்க, இல்லை என்றால் பார்க்காதீங்க என்று அந்த பதிவில் திரிஷா குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்