- Advertisement -
Homeபொழுதுபோக்கு“தளபதி 68” திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கப்போகுது, அதுவும் இந்த இடத்தை சுத்திதான் இருக்கப்போகுதாம்- சர்ப்ரைஸை...

“தளபதி 68” திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கப்போகுது, அதுவும் இந்த இடத்தை சுத்திதான் இருக்கப்போகுதாம்- சர்ப்ரைஸை உடைத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த மூத்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

“லியோ” திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்தளவுக்கு “தளபதி 68” திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. “தளபதி 68” திரைப்படத்தை குறித்து சமீப நாட்களாக பல ஆச்சரிய தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் தந்தை கதாபாத்திரம் மிகவும் வயதான கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

இந்த வயதான கெட்டப்பை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதற்காகத்தான் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள Institute of creative technology என்ற மையத்திற்கு சென்றுள்ளனராம். அங்கே விஜய்யை உடல் முழுவதும் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் செய்யப்பட்ட உருவத்தை வைத்து விஜய்யை வயதான கதாபாத்திரத்தில் எவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்தலாம் என கம்ப்யூட்டர் கிராபிக்ஸின் மூலம் வெங்கட் பிரபு திட்டமிட உள்ளாராம். இவ்வாறு ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவருகிறது.

அதே போல் இத்திரைப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் எனவும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடிக்க உள்ளார் எனவும் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தை குறித்து மேலும் ஒரு மாஸ் ஆன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் முழுக்க முழுக்க லண்டன் பகுதியில் உள்ள ஒரு தீவில் படமாக்க உள்ளனராம். அந்த தீவைச் சுற்றித்தான் கதையே நகர உள்ளதாம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்