- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையபுர அரண்மனையில் 30 அடியில் பாம்பு வந்ததுக்கு காரணம் இதுதான்- சந்திரமுகி படத்தின் சீக்ரெட்டை உடைத்த...

வேட்டையபுர அரண்மனையில் 30 அடியில் பாம்பு வந்ததுக்கு காரணம் இதுதான்- சந்திரமுகி படத்தின் சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரிலேயே மிகப் பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இன்றைக்கும் இத்திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட்டான திரைப்படமாகும்.

இதில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா, தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தினார். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடிகள் இப்போதும் ரசிக்க வைப்பவை.

ஆனால் இத்திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு புரியாத புதிராக இருப்பது சந்திரமுகி அறையில் உள்ள பாம்புதான். 30 வருஷமா 30 அடில பெரிய பாம்பு இருக்கிறது என்ற வசனத்திலேயே அந்த பாம்புக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஆனால் அந்த பாம்பு கடைசி வரை யாரையும் எதுவும் செய்யாது. கிளைமேக்ஸ் காட்சியில் சந்திரமுகி அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே அந்த பாம்பும் கிளம்பிவிடும். இந்த நிலையில் பி.வாசு தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பி.வாசு, “சந்திரமுகி” படத்தில் இடம்பெற்ற பாம்பு குறித்து ஒரு சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“உலகில் எங்கெல்லாம் புதையல் இருக்கிறதோ அங்கெல்லாம் நிச்சயமாக பாம்பு இருக்கும். சந்திரமுகி என்ற மிகப்பெரிய பொக்கிஷம் அங்கே இருக்கிறது. அவளுடைய நகைகள் எல்லாம் அங்கேதான் இருக்கும். அங்கேதான் பாம்பும் இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபபுரம் கோவிலில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அறையை திறந்துபார்த்தபோது அங்கே பாம்பு இருந்ததாக சொன்னார்கள். புதையல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாம்பு இருக்கும் என பலர் கூறுவார்கள். ரஜினி சாரும் பாம்பு இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினார். பாம்பு அந்த இடத்தில் ஒரு பாதுகாப்புக்காக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

சற்று முன்