- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பிறந்தநாளில் “தளபதி 68” படக்குழு வெளியிடவுள்ள முக்கிய அப்டேட் - ஆர்வத்தில் காத்திருக்கும் ரசிகர்கள்.

விஜய் பிறந்தநாளில் “தளபதி 68” படக்குழு வெளியிடவுள்ள முக்கிய அப்டேட் – ஆர்வத்தில் காத்திருக்கும் ரசிகர்கள்.

- Advertisement -

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் சில நாட்களுக்கு முன்பு “தளபதி 68” திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவந்தது. “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ள செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே போல் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

“தளபதி 68” திரைப்படம் குறித்து அனுதினமும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. முதலில் இத்திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் இத்திரைப்படத்திற்கு CSK என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறினார்கள். அதன் பின் இத்திரைப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவில்லை, ஜோதிகாதான் நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளிவந்தது.

இவ்வாறு தினமும் “தளபதி 68” குறித்த தகவல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில் தற்போது “தளபதி 68” குறித்து மேலும் ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது வருகிற ஜுன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று, “தளபதி 68” திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை கேள்விபட்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.

ஏற்கனவே விஜய் பிறந்த நாள் அன்று “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என ஒரு தகவல் பரவியது. ஆனால் அத்தகவல் வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 68” திரைப்படத்தின் டைட்டில் வெளிவரும் என்று செய்திகள் பரவி வருகின்றன.

சற்று முன்