- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவி வராங்க வழிய விடுங்க.. இன்ஸ்டாகிராமில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா

தலைவி வராங்க வழிய விடுங்க.. இன்ஸ்டாகிராமில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா

- Advertisement -

ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா சந்திரமுகியில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டு பிரேக் அப் ஆனது. பிறகு வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை திருமணம்வரை கொண்டு செல்வதற்காக மதம் மாறி சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்தார் நயன். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப் ஆக நயன்தாராவை தனிப்பட்ட முறையில் பலரும் விமர்சித்தார்கள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத நயன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பம், ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் போன்ற படங்களில் நடித்தார். அனைத்து படங்களுமே ஹிட்டாகின. நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்து பல வருடங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உலக், உயிர் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து ஜெயம் ரவியின் இறைவன், தனது 75 படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இந்த மூன்று படங்களுமே ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையே எந்தப் படத்தின் ப்ரோமோஷனிலும் நயன்தாரா கலந்துகொள்ளமாட்டார். அதேபோல் சோஷியல் மீடியாக்களிலும் தனக்கென்று எந்த அதிகாரப்பூர்வ கணக்கையும் வைக்காமல் இருந்தார். அவர் தனக்கென்று ஒரு வட்டம் போட்டு தான் உண்டு தன் வேலை, குடும்பம் உண்டு என்று இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் பெருகிறார்களே தவிர குறைவதில்லை.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக நயன் தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கியிருக்கிறார். முதல் போஸ்ட்டிலேயே நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற கேப்ஷனுடன் தன்னுடைய இரண்டு மகன்களையும் இரண்டு கைகளில் தூக்கிக்கொண்டு பின்னணியில் ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் ஒலிக்க; மாஸாக நடந்துவருகிறார் நயன். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதுமட்டுமின்றி கணக்கு ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே அவரை 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்