- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 படத்தின் போஸ்டர் வந்தாச்சு... ரெண்டு பக்கமும் விஜய்... டைட்டிலே தூள் கிளப்புதே பா...

தளபதி 68 படத்தின் போஸ்டர் வந்தாச்சு… ரெண்டு பக்கமும் விஜய்… டைட்டிலே தூள் கிளப்புதே பா…

- Advertisement -

நடிகர் விஜய்க்கு இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், குடும்பத் திரைப்படமாக அமைந்ததால் வசூலில் சக்கை போடு போட்டது. இதே போல் தான் லியோ திரைப்படத்தின் நிலைமையும். எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் விமர்சனத்தைப் பெறவில்லை என்றாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது தனது 68வது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார் தளபதி விஜய். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, இதில் விஜய்க்கு படத்திற்காக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதேபோல் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை எடுக்கிறது.

- Advertisement -

இதில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை சேர்த்து இருக்கிறார் வெங்கட் பிரபு. சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், இவானா, யுகேந்திரன் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நிச்சயம் வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தில் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அடுத்ததாக இலங்கையில் சூட்டிங் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு சென்று இருக்கும் வெங்கட் பிரபு லொகேஷன் பார்த்து வருகிறார். இந்த நிலையில் படபிடிப்பின் போது வெங்கட் பிரபுவிற்கும் விஜய்க்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

- Advertisement -

அதாவது எப்போதுமே நாளைக்கான காட்சியை, விஜய்க்கு இன்றே கொடுத்து விடுவது என்பது எல்லா படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறதாம். ஆனால் இதில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு விஜய் வந்த பிறகு அதற்கான காட்சி தேர்வில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது விஜய்க்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். இது தொடர்பாக வெங்கட் பிரபுவை அழைத்து விஜய் கறார் காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்த்த விஜய் 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், பாராசூட்டில் இருந்து இறங்கி வந்தவாறு இடது பக்கம் ஒரு விஜய் வலது பக்கம் ஒரு விஜய் இருக்கிறார்கள். ஒரு விஜய் வயதானவர் போல் இருப்பதால், இது தந்தை மகன் கான்செப்ட் என்பது உறுதியாகியுள்ளது. படத்திற்கு the greatest of all time அதாவது the GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கீழே எ வெங்கட் பிரபு ஹீரோ என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்