- Advertisement -
Homeபொழுதுபோக்குவந்தாச்சு விஜய் 68 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பாளர் கொடுத்த தரமான செய்தி...

வந்தாச்சு விஜய் 68 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்… தயாரிப்பாளர் கொடுத்த தரமான செய்தி…

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் இறுதி நாளில் இருக்கிறோம். இந்த ஆண்டுக்கான சிறந்த படங்கள் சிறந்த பாடல்கள் சிறந்த இயக்குனர்கள் குறித்து இணையத்தில் ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதே சமயம் அடுத்தாண்டு வெளியாக போகும் திரைப்படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் பட்டியலையும் பலர் கூறி வருகிறார்கள்.

இந்தப் பட்டியலில் கேப்டன் மில்லர், அயலான், தங்கலான், வேட்டையன், விடாமுயற்சி, தலைவர் 171 என ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது விஜய்யின் 68வது திரைப்படம். இதற்கான சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தான் இதன் இயக்குனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை atதயாரித்து வருகிறது. இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், அரவிந்த் ஆகாஷ், இவானா, யுகேந்திரன், அஜய்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது போக முக்கிய நட்சத்திரம் ஒருவரும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் சூட்டிங் டெல்லியில் ஆரம்பித்து, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு உள்ளார். இதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக அவர் சென்று இருக்கிறார். மாநாடு படத்தில் எப்படி டைம் லுக் கான்செப்ட்டை வெங்கட் பிரபு விறுவிறுப்பாக கொடுத்தாரோ, அதேபோல் இதில் டைம் மெஷின் கான்செப்ட்டை அவர் எடுக்க இருக்கிறாராம்.

இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக விஜய்யை இளமை தோற்றத்தில் காண்பிப்பதற்கு, புதிய தொழில்நுட்பத்தை படக்குழு கையில் எடுத்துள்ளதாம். படத்தில் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு விஜய் வருவது போல் கான்செப்ட் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முதலில் பாஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

பசில் என்றும் டைட்டில் வைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா திட்டவட்டமாக மறுத்தார். இதனைத் தொடர்ந்து படத்திற்கு கோட் என பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அத்தனைக்கும் இன்று மாலை 6 மணிக்கு பதில் கிடைக்க இருக்கிறது. படத்தின் அப்டேட் அப்போது வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். இதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சற்று முன்