- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது கடைசி படத்தில் முதலமைச்சராக நடிக்கிறாரா விஜய்... அதற்கு இப்படி ஒரு டைட்டிலா... விஜய் ரசிகர்களையே...

தனது கடைசி படத்தில் முதலமைச்சராக நடிக்கிறாரா விஜய்… அதற்கு இப்படி ஒரு டைட்டிலா… விஜய் ரசிகர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் தகவல்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு கோட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் போஸ்டரிலும் இரண்டு விஜய் இருப்பதால் கிட்டத்தட்ட இது உண்மைதான் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் கோட் படத்தை டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெங்கட் பிரபு எடுப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் இருக்கும் விஜய் நிகழ்காலத்தில் வருவது போல் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன், பிரேம்ஜி அமரன், யோகி பாபு, அஜ்மல், வைபவ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கிறது. அனேகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடியும் என்று கூறப்படுகிறது. இன்னும் 20 சதவீதம் தான் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இதனிடையே அண்மையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை உறுதி செய்தார் நடிகர் விஜய். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய், தான் ஒப்புக் கொண்டுள்ள ஒரு படத்தை முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க, விஜயின் அந்த கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி இன்று வரை ஓயாமல் இருந்து கொண்டே இருக்கிறது.

இதற்கான பட்டியலில் எச் வினோத், அட்லி, ஆர் ஜே பாலாஜி, வெற்றிமாறன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இப்படியான சூழலில் விஜயை இயக்க வாய்ப்பு அட்லிக்கே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டி கொடுத்த அட்லி, தான் விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் அதற்கு ஆளப்போறான் தமிழன் என பெயர் வைப்பதாக கூறினார். இந்த வீடியோவை வைரலாக்கி வரும் விஜய் ரசிகர்கள், அட்லி கூறியது உண்மைதான் என்று பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், படத்தில் விஜய் முதலமைச்சராக நடிப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக திரைத்துறை வட்டாரம் காத்திருக்கிறது.

சற்று முன்