- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா... தனி ஒருவனுக்கு பிறகு இத்தனை போலீஸ் கெட்டப் போட்டிருக்கிறாரா ஜெயம் ரவி... கேக்குற நமக்கே...

அடேங்கப்பா… தனி ஒருவனுக்கு பிறகு இத்தனை போலீஸ் கெட்டப் போட்டிருக்கிறாரா ஜெயம் ரவி… கேக்குற நமக்கே சோர்வா இருக்கே… அப்போ அவருக்கு?…

- Advertisement -

2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. அவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், இதுவரை 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த பயணத்தில் சில குறிப்பிட்ட வெற்றிகளையும் தந்திருக்கிறார் ஜெயம் ரவி.

அவரது நடிப்பில் வெளியான ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசித்தன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள் மொழி வர்மனா நடித்திருந்த அவர், இளவரசர் கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிபடுத்தி பாராட்டை பெற்றார்.

- Advertisement -

இதன்பிறகு ஜெயம் ரவி நடித்த அகிலன், சமீபத்தில் வெளியான இறைவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியை கொடுத்தன. ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருந்தார்.

படத்தில் வில்லன் கதாபாத்திரம் கன கச்சிதமாக எழுதப்பட்டு, சித்தார்த் அபிமன்யு எனும் கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி சரியாக பொருந்தி போனதால், படம் நல்ல அளவில் ரீச் ஆனது. தனி ஒருவனுக்கு கிடைத்த வரவேற்பின் தாக்கத்தால் தொடர்ந்து பல படங்களில் போலீஸ் ரோல்லிலேயே நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

- Advertisement -

அதில் மிருதன் படத்தை முதலில் கூறலாம். கொடைக்கானலில் போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி வருவார். இந்த படம் ஸோம்பிகள் பற்றி எடுக்கப்பட்டிருந்தது. ஸோம்பிகளாக மாறுபவர்களை சுட்டும் வீழ்த்தும் அவர், கடைசியில் தனது காதலியை காப்பாற்றுவதற்காக ஸோம்பிகளால் தாக்கப்பட்டு அதுவாகவே உருமாறுவார். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றது. போகன் படத்திலும் போலீசாகவே வந்தார்.

இதேபோல் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் உருவான அடங்க மறு படத்தில் எஸ்.ஐ. சுபாஷ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். வழக்கமான பழி வாங்கல் கதையையே வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான இறைவன் படத்திலும் ஏசிபி அர்ஜுனாக வந்தார் ஜெயம் ரவி. சைக்கோ த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. இப்படி தொடர்ந்து போலீஸ் அதிகாரியாகவே நடித்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் மித்ரன் ஐபிஎஸ்ஸாக வருவார் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

சற்று முன்