- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 படம் ஹிட் கொடுத்த உடனே இப்படியா? நடிகர் ரிஷிகாந்த் எழுந்த பகீர் குற்றச்சாட்டு -...

2 படம் ஹிட் கொடுத்த உடனே இப்படியா? நடிகர் ரிஷிகாந்த் எழுந்த பகீர் குற்றச்சாட்டு – நடிகர் ஜீவன் மாதிரி நீங்களும் ஆயிடாதீங்க என எச்சரிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக துணை நடிகராக போராடி இப்போது மொத ராத்திரி டோரதி படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் நடிகர் ரிஷிகாந்த். இந்த நிலையில் யார் போன் செய்தாலும் அவர் போனை எடுத்து பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி போன் செய்தால் கூட அவர் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 2 படங்கள் ஹிட் ஆன உடனே ரிஷிகாந்தின் ஆட்டிட்யூட் இப்படி இருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஆட்டிட்யூட் காட்டிய நடிகர் ஜீவன் நல்ல நடிகராக இருந்தும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார். இதை கவனத்தில் ரிஷிகாந்த் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

சற்று முன்