நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இப்போது இருந்து வருகிறார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த விஜய் ஆரம்பத்தில் சாதாரண படங்களை தான் தந்தார். அவருக்கு எஸ் ஏ சந்திரசேகர் மகன் என்று அடையாளத்தை தவிர நடிகர் என்ற அடையாளத்தை வெகு சுலபமாக பெற முடியவில்லை.
இந்த சூழலில் தான் கேப்டன் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அளித்தார். இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நடித்த பிறகு விஜய்க்கு சகல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நடிகர் என்பதற்கான அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து விஜய் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் கூட்டமும் வர ஆரம்பித்தது.
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ் போன்ற படங்கள் விஜயின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை கொண்டு வந்தன. அதன் பிறகு இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இப்போது அரசியல் கட்சித் தலைவராகவும் உருவாகி இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக முதல்வர் பதவிக்கு போட்டியிடவும் ஆயத்தமாகி வருகிறார். வருகிற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அவரது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த வெ க கட்சியினர் செய்து வருகின்றனர்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜய் போல சினிமா நடிகராகும் விருப்பமின்றி, அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல சினிமா இயக்குனராகும் ஆர்வத்தில் இருக்கிறார். இப்போது லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவும் அவர் தயாராகிவிட்டார். இதற்காக நடிகர்கள் துருவ் விக்ரம், கவின் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்டோரிடம் கதையைச் சொல்லி தன்னுடைய படத்தில் நடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் இதில் யாருமே அவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க தம்மதிக்கவில்லை.
இந்த சூழலில் ராயன் படத்தில் தனுஷூக்கு தம்பியாக நடித்த தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் . ஆனால் இந்த படத்தின் கதை, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதைதான் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே லைக்கா ப்ரொடக்சன்ஸ் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட லால் சலாம் படத்தை இயக்கி பலத்த நஷ்டம் அடைந்தது. அந்தப் படத்தை இயக்கியவர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். லால் சலாம் படத் தோல்வியின் காயம் இன்னும் ஆறாத நிலையில், இப்போது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சையும் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்குவது லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய தலைவலியை தந்துள்ளது.





