- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது விஜய் 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, நிச்சயமாக இதுதான்...

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது விஜய் 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, நிச்சயமாக இதுதான் தளபதியின் கடைசி படமா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்ற பட்டத்தை முதலில் வென்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதற்குப்பிறகு வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போது அந்த வரிசையில் அந்த பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பலவும் 200 கோடி ரூபாய், 300 கோடி ரூபாய், 600 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வசூல் செய்து வருகின்றன.

கடந்தாண்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் 650 கோடி ரூபாய் வசூலித்தது. சமீபத்தில் வெளியாகி உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் 355 கோடி ரூபாய் இதுவரை வசூலித்துள்ளது. இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் திடீரென அவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தனது கொடியை கடந்த மாதம் 22 ஆம் தேதி அறிமுகம் செய்தார். கட்சி பாடலையும் வெளியிட்டார்.

- Advertisement -

இதையடுத்து வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை அவர் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் விக்கிரவாண்டியில் அரசியல் மாநாடு நடத்த தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பல விதங்களில் ஆளுங்கட்சி தரப்பில் இடையூறுகளும் குறுக்கீகளும் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் நடிகர் விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 69வது படம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன. அடுத்த அக்டோபர் மாதம் 3ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகர் மோகன்லால், நடிகைகள் சிம்ரன், மமீதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாக இருக்கிறது. இவர் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே நடித்தவர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இவரும் பீஸ்ட் படத்துக்கு இசையமைத்தவர். படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு அமைக்க உள்ளார் போன்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே விஜய் 69 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் நேற்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை வெளியான அந்த அறிவிப்பில் இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று மாலை வெளியாகும் அறிவிப்பில் விஜய் 69 படம் குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட் வெளிவரலாம். அதே வேளையில் இதுதான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என்ற தகவலும் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்