- Advertisement -
Homeபொழுதுபோக்குமழை பிடிக்காத மனிதன் படத்துக்காக கடைசி வரை போராடி பார்த்த இயக்குனர், முடியவே முடியாது என...

மழை பிடிக்காத மனிதன் படத்துக்காக கடைசி வரை போராடி பார்த்த இயக்குனர், முடியவே முடியாது என கைவிரித்த கேப்டனின் குடும்பம் – கை கொடுத்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் தலைப்பை, வெகுவான தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த படத்தை டைரக்டர் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்த விஜய் மில்டன். கோலிசோடா என்ற படம் மூலம் 2014ம் ஆண்டில் இயக்குனராக மாறினார்.

விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா 2, கடுகு, 10 எண்றதுக்குள்ள போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து இப்போது, மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஆக்‌ஷன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தின் டீசர் நேற்று 29ம் தேதி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில உயிர்கள் அற்பமானவை என்ற எண்ணமே, உலகின் அனைத்து தீமைக்குமான விதை என்ற வாக்கியத்துடன் டீசர் துவங்குகிறது. டீசர் முழுவதும் அதிரடி சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன.

இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் பகீரத முயற்சி மேற்கொண்டார். அதாவது இந்த படத்தை இயக்கிய போது, விஜயகாந்த் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வில்தான் இருந்தார். அவரது முகம், முகத்தில் சில பாவனைகளை மட்டும் எடுத்து ஏஜ தொழில்நுட்பம் மூலம், இந்த படத்தில் அவருக்கான ஒரு கேரக்டரை உருவாக்க திட்டமிட்டார் விஜய் மில்டன்.

- Advertisement -

கேப்டனின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்களிடம், வீட்டுக்கு இருவர் மட்டுமே வருகிறோம். ஷூட்டிங் போல இல்லாமல், அவரை கேமராவில் சில நிமிடங்கள் படம் எடுத்து வைத்துக் கொள்கிறோம், என்று வற்புறுத்தி கேட்டுள்ளனர். ஆனால் கடைசி வரை கேப்டன் குடும்பம் இதற்கு சம்மதிக்கவில்லை. முடியவே முடியாது என கைவிரித்து விட்டனர்.

இதனால் பலத்த ஏமாற்றமடைந்த விஜய் மில்டன், அதற்கு பின்புதான் அந்த கேரக்டரில் நடிகர் சத்யராஜை நடிக்க வைத்துள்ளார். படத்தில் அது சிறிய கேரக்டராக இருந்தாலும், விஜயகாந்த் நடிக்க வேண்டிய கேரக்டர் என்பதால், கேப்டன் மீது கொண்ட நட்பாலும், அன்பாலும் அந்த கேரக்டரில் நடிக்க சத்யராஜ் சம்மதித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்