- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துல எனக்காகவே அந்த கேரக்டர உருவாக்குனாங்க... ஊரே என்ன பாராட்டுச்சு - நடிகர் சார்லி...

விஜய் படத்துல எனக்காகவே அந்த கேரக்டர உருவாக்குனாங்க… ஊரே என்ன பாராட்டுச்சு – நடிகர் சார்லி பகிர்ந்த தகவல்

- Advertisement -

சார்லி, தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படும் சிறந்த நடிகர். நடிக்கத் துவங்கிய ஆரம்பத்தில் இருந்தே, ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக சார்லி நிச்சயம் இருப்பார். அதன்பிறகு சின்னிஜெயந்த், ஜனகராஜ், செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் காமெடி ரோல்களில் நடித்தார். சில படங்களில், குணச்சித்திர நடிப்பிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் சார்லி.

சார்லி நடித்த படங்களில், பிரண்ட்ஸ் படம் மிக முக்கியமானது. இயக்குநர் சித்திக் இயக்கிய இந்த படத்தில், பெயிண்டிங் கான்ட்ராக்டரான நேசமணி ( வடிவேலு) யிடம், பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவராக கோபால் என்ற கேரக்டரில் சார்லி நடித்திருப்பார். தலையில் அடிப்பட்டு பழைய நினைவுகளை மறந்துவிட்டு, சார்லி செய்யும் அலப்பரைகள் படத்தில், வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் அடித்தளம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சார்லி, இயக்குநர் பாசிலிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்தவர் சித்திக். அப்போதே எனக்கு நல்ல நண்பர். ப்ரண்ட்ஸ் மலையாள படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போவதாக என்னிடம் அவர் கூறினார்.

அவரிடம் இருந்து அழைப்புவரும் என காத்திருந்தேன். ஆனால் வரவில்லை. தற்செயலாக கோவை விமானத்தில், இயக்குநர் சித்திக்கை சந்தித்தேன். அப்போது, பிரண்ட்ஸ் படம் ஷூட்டிங் துவங்கி, 15நாட்களாகி விட்டது. அந்த படத்தில் நடிக்க, உங்களைத் தேடினேன், கிடைக்கவில்லை, என்று வருத்தப்பட்டார்.

- Advertisement -

பிறகு இருவரும் ஒன்றாக கோவையில் இருந்து சென்னைக்கு வந்தோம். அப்படி வரும்போது, ஆங்கில படம் ஒன்றில் நடித்த ஸ்டேன் லாரல் என்ற நடிகர், தலையில் அடிபட்டு பழையதை மறந்துவிடுவார், பின்பு பெரிய அதிகாரத்தில் இருப்பவர் போல நடந்துக்கொள்வார் என்பதை சொல்லி அதை அப்படியே நடித்துக் காட்டினேன்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சித்திக், ‘பிரண்ட்ஸ் படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கிறீர்கள்’ என்று உறுதியளித்தார். பின்னர், எனக்காகவே அந்த மறதி கோபால் கேரக்டரை சித்திக் உருவாக்கினார். படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி என்னை போனில் அழைத்து பாராட்டினார், மலையாள பிரண்ட்ஸ் படத்தில் இப்படி ஒரு கேரக்டரே இல்லை. உனக்காக சித்திக் உருவாக்கி இருக்கிறார் என, என் நடிப்பை பிரமாதம் என்றார், என்று புளகாங்கிதமாக அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார் நடிகர் சார்லி.

- Advertisement -

சற்று முன்