- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி என்னை மாத்திடாதீங்க… இயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் நடிகர் சூரி - ஆளு படு...

அந்த மாதிரி என்னை மாத்திடாதீங்க… இயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் நடிகர் சூரி – ஆளு படு விவரமா இருக்காரே என ஆச்சரியப்படும் கோலிவுட்!

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் நடிகர் சூரி. அவர் நடித்த விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய 5 படங்களில் விடுதலை 2 படமும் கொட்டுக்காளி படமும் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. 3 படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன.

ஆனாலும் நடிகர் சூரி இயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இப்போது அவர் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர்.

- Advertisement -

மண்டாடி படம் கடல் மீனவமக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் சூரிக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்க நடிகர் சூரி கமிட் ஆகியிருக்கிறார்.

இதற்கிடையே தனது சம்பளத்தை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 15 கோடியாக சூரி உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரே தயாரிப்பாளராக மாறவும் முடிவு செய்திருக்கிறார். இதற்காக விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிக்க போவதாகவும் ஒரு தகவல் உள்ளது. அத்துடன் தனது தந்தையின் வாழ்க்கையை அவரே நடித்து பயோபிக் படமாக இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் நடிகர் சூரி சில கண்டிசன்களை போடுகிறார். அதில் முக்கியமாக நான் தாடி மீசையுடன்தான் படத்தில் வருவேன். தாடியுடன் நடித்தால்தான் என் நடிப்பில் ஒரு பர்சனலாட்டி இருக்கும். மெச்சூரிட்டியாக தெரியும். அதனால் படத்தில் தாடியுடன் நான் இருப்பது போன்ற கெட்டப்பில் மட்டுமே நடிப்பேன்.

தொடர்ந்து கிராமத்து கதைகளில் நான் நடிக்க வைத்து என்னை ராமராஜன் ராஜ்கிரண் முரளி போன்ற கிராமத்து நாயகன்களாக மாற்றி விடாதீர்கள். நகரத்து கதைக்களங்களில் ஸ்டைலிஷ் ஆன கெட் அப்களில் எனக்கு நடிக்க கதை உருவாக்குங்கள். ரொமாண்டிக் சென்டிமென்ட் மட்டுமின்றி வித்யாசமான கதைகளுடன் வாருங்கள் என்றும் அவர் கண்டிஷன் போடுகிறார். இதனால் இயக்குனர்கள் 3 படம்தானே ஹிட், அதுக்கே இவ்வளவு அலப்பறையா என நொந்துக்கொண்டு செல்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்