தமிழ் சினிமாவில் மிக நல்ல பின்னணி பாடகியாக இருந்து வருபவர் சின்மயி. பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் கலைஞராகவும் சின்மயி உள்ளார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து குறித்து சின்மயி பாலியல் புகார் கூறியது கோலிவுட்டில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தொடர்ந்து பணிசெய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் சினிமாவில் தொடர்ந்து பாட முடியவில்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் தெலுங்கில் பாடகியாக உள்ள அவர், தெலுங்கில் பல நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் பாடிய முத்தமழை பாடல் பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பாடகி சின்மயியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் கவிஞர் வைரமுத்து குறித்து ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பிய நிலையில், சின்மயி பயங்கரமாக டென்சன் ஆனார். அப்போது சின்மயி பேசியதாவது, வைரமுத்து பத்தி என்கிட்ட கேட்டே ஆகணுமா உங்களுக்கு? உலகத்துல வேற யாருமே இல்லையா கேட்கறதுக்கு? வைரமுத்துவை பத்திதான் கேட்கணுமா?
அது உங்க தப்பு இல்லே, உங்களை கேட்க வெச்சிருப்பாங்க. ஆனா உங்களுக்கு இப்படி ஒரு ட்ரிக்கார்டா ரியாக்ஷன் என்கிட்ட இருந்து வரணும். இந்த மாதிரி ஒரு பதில் சொல்லணும். நீங்களும் ஒரு பெண்ணா இருந்துட்டு எங்கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்கறதை என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு.
நிஜமா சொல்லுங்க, இது தேவையா? 7 வருஷமா என்னை தடை பண்ணியிருக்காங்க. இன்னமும் கோர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன். கேஸ் போயிட்டு இருக்குது. அந்த விஷயம் பத்தி பேசலை. டப்பிங் யூனியன் இடிச்சு தரைமட்டமாக்கிட்டாங்க, அந்த விஷயம் பத்தி எல்லாம் எதுவும் பேசலையாம். அவர் ஏதோ சொல்லியிருக்கார். அவரை பத்தி கேட்கறீங்க.
ஆனா ஊர்வசி மேடம் பேசியிருக்காங்க. அதைப்பத்தி எதுவும் பேசலை நீங்க? ஆனா வைரமுத்து பத்தி பேசறீங்க? என்னை ஏன் இப்படி டிரிக்கர் பண்றீங்க? இதுக்கு என்ன காரணம்? இதுல என்ன பாயிண்ட் நான் மரியாதையா தான் கேட்கிறேன். இதுல என்ன பாயிண்ட் என்று பாடகி சின்மயி கேள்வி கேட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.





