- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் நடித்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடை - திடீருன்னு இப்படி...

கமல் நடித்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடை – திடீருன்னு இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே? பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்களின் பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக தான் இருக்கின்றன. அப்படி ஒரு சில படங்கள் கமல் நடித்து பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பின்னாளில் அந்த படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதற்கு உதாரணமாக சுந்தர் சி இயக்கத்தில் கமல் நடித்த அன்பே சிவம் படத்தைச் சொல்லலாம்.

நடிகர் சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியான படம் குணா. சுவாதி சித்ரா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான குணா படத்தை, நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியீடு செய்தது.

- Advertisement -

குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்தினம், எஸ் வரலட்சுமி, கிரீஸ் கர்னாட், எஸ் பி பாலசுப்பிரமணியம், காக்கா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தன.

கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குணா படம், இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு மிகச் சிறந்த படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் குணா படத்தில் கமல், எஸ் ஜானகி பாடிய கண்மணி அன்போடு என்ற பாடலை இடம்பெறச் செய்திருந்தனர். அந்த படத்தின் பெரிய வெற்றிக்கு இந்த பாடல் மிகப்பெரிய அளவில் உதவி செய்தது என்றால், அது மிகையல்ல.

- Advertisement -

இந்நிலையில் குணா படத்தை டிஜிட்டல் வடிவத்தில் மெருகூட்டி, ஒலி ஒளி அமைப்பில் புதுப்பொலிவுடன் கடந்த ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாத காரணத்தால் குறிப்பிட்ட நாளில் குணா படம் ரி ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் குணா படத்தை மறுவெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த மனுவுக்கு வருகிற 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இது கமல் ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்