வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்போது துருக்கியில் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு பிறகு தனது 69 வது படத்தில் விஜய் நடிக்கப் போகிறாரா, அல்லது அடுத்து அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தப் போகிறாரா என்பதற்கு இன்னும் சில தினங்களில் விடை தெரிந்துவிடும். ஏனெனில் இருதரப்பு குறித்தும் விஜயிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.
கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் விஜய்க்கும், இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் மகள் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் ஜேசன் சஞ்சய், தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல, இயக்குநராகி இருக்கிறார். விரைவில் லைக்கா புரடக்சனில் 10 மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படத்தை இயக்க உள்ளார்.
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக நீண்ட நாட்களாக தகவல் உள்ளது. லண்டனில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் சங்கீதா பிரிந்து சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் அரசியல் களத்தில் இறங்குவது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்றும் பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி திரிஷாவுடன் விஜய் பல படங்களில் நடித்த நிலையில், அவர்களது நட்பும், பழக்கமும் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை. திரிஷாவுடன் நடிக்க வேண்டாம் என பலமுறை சொல்லியும் லியோ படத்தில் விஜய், திரிஷாவுடன் நடித்தார். அதுமட்டுமின்றி லிப்லாக் காட்சியிலும் நடித்து சங்கீதாவை வெறுப்பேற்றி இருக்கிறார்.
இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி சேனலில், ஒரு நேர்காணலில், விஜய் – திரிஷா பங்கேற்று அருகேருகே அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுஹாசன், உங்க மனைவி உங்களை எப்படி திட்டுவாங்க, என கேள்வி கேட்க, அதற்கு விஜய் ‘அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டே தான் இருப்பா,’ என விளையாட்டாக பதில் அளித்துள்ளார். திரிஷா அருகில் இருக்கும்போது இப்படி சொன்ன ஒரு பதில் இப்போது வைரலாகி வருகிறது.





