தமிழ் சினிமாவில், சென்டிமென்ட் என்பது எப்போதும் இருக்கிறது. அதாவது, சில விஷயங்களில் படக்குழுவினர், இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் சென்டிமென்ட் பார்ப்பவர்களாகவே இருக்கின்றனர். இளையராஜா முதன்முறையாக, ரெக்கார்டிங் பாடலை துவங்கிய உடனே, மின்தடை ஏற்பட்டதாம். ஆனால், அவருக்கு அந்த சென்டிமென்ட் விதிவிலக்காக அமைந்தது.
லியோ இசை வெளியீட்டு விழாவில் கூட ஆரம்பத்தில் இருந்தே பலவிதமான சர்ச்சைகளும், பிரச்னைகளும் கிளம்பிய நிலையில், விழா நடக்குமா என்றே தெரியலையே என்பது பலரது கேள்வியாக இருந்தது. கடைசியில் அதுதான் நடந்தது. பல இடையூறுகளால் படத்தின் இசை விழா நடக்காது என அறிவிக்கப்பட்டது.
லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிற நிலையில், அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார் விஜய், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் 68 படத்தில் விஜய் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றிய முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வரும் அக்டோபர் 2ம்தேதி, அதாவது காந்தி ஜெயந்தியன்று விஜய் 68 படத்தின் துவக்க விழா, பட பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய், வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோராம் உள்பட படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
விஜய் 68 படத்தின் பூஜை, வரும் 2ம் தேதியன்று நடக்கிற போது, பூஜை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற வேண்டிய பாடல் காட்சியை எடுக்க, படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், அன்று காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை தினம் என்பதால், படக்குழு மற்றும் துணை நடிகர் உள்ளிட்ட அனைவருக்கும் 3 பேட்டா தர வேண்டிய விதிமுறை உள்ளது.
அதனால், முதல் நாளிலேயே எதற்காக எக்ஸ்டரா செலவு என யோசித்த படக்குழு, அந்த பாடலை அடுத்த நாள் 3ம் தேதி எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறது. என்ன இது, படமே இன்னும் ஆரம்பிக்கலை, அதுக்குள்ள இப்படி குழப்பறாங்களே என இதைக் கேள்விப்ப ரசிகர்கள் சிலர் புலம்ப ஆரம்பித்துள்ளனர். சினிமா தொழிலாளர்களுக்கு 3 பேட்டா சம்பளம் கொடுக்க யோசிக்கறாங்க, ஆனா 2 கோடி ரூபாய் செலவு பண்ணுன இசை விழா அப்படியே நின்னு போச்சே என்றும் கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.





