நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய அளவில் பான் இந்தியா மூவியாக வெற்றி பெற்ற படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்தியா முழுவதும் பிளாக் பஸ்டர் மூவியாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
செம்மரக் கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜூன் வாழ்ந்திருந்தார். சண்டை, பாட்டு, காதல், சென்டிமென்ட், காமெடி என எல்லாவிதமான காட்சிகளிலும் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய அல்லு அர்ஜூனுக்கு, மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது இந்த படத்துக்கு கிடைத்தது.
இந்த படத்தின் 2ம் பாகம், புஷ்பா 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தில் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் வருகிற 2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு தான் இந்த படம் ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், புஷ்பா 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வமும் காணப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் பகத் பாசில் நடித்தது குறித்து கூறுகையில், இயக்குனர் சுகுமாரன் எனது நண்பர் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன். என்னை அடுத்த லெவலுக்கு எல்லாம் இந்த படம் கொண்டு செல்லாது என்று ஓப்பனாக பேசியிருந்தார்.
இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தை பார்த்த படத்தின் இயக்குனர் சுகுமாறன், இந்த படத்தை ஷூட் செய்த 60 நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் எனக்கு எதுவுமே திருப்தி தரவில்லை. அதனால் அந்த 60 நாட்கள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்கி விட்டு, மீண்டும் 60 நாட்கள் ரி ஷூட் நடத்தி அதே காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்த 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்திய வகையில், ரூ. 200 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு செலவாகி இருக்கிறது. இப்போது மீண்டும் அதே போல் 60 நாட்கள் ரி ஷூட்டிங் நடத்தினால், ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடி வரை செலவாகலாம் என்ற நிலையில், இப்படி ஒரு ஷாக்கிங் தகவலை டைரக்டர் சொன்னதால் படத்தின் தயாரிப்பாளர் நொந்து போய் இருக்கிறார்.





