நடிகர் ஜெயம் ரவி, சமீப காலமாக அவரது படங்கள் எதுவுமே சரியாக போகாமல் பயங்கர அப்செட்டில் இருந்து வருகிறார். அவர் மலை போல் நம்பியுள்ள படம், காதலிக்க நேரமில்லை தான். கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்துள்ள இந்த படத்திலும், அதிக முக்கியத்துவம் கதாநாயகி நித்யா மேனனுக்குதான் என்று சொல்லப்படுகிறது. எனினும் படம் ஹிட் ஆனால், ஜெயம் ரவிக்கும் அது வெற்றிதான்.
சமீபத்தில் தக்லைப் படத்தில் நடிக்க கமிட் ஆன ஜெயம் ரவி, அந்த படத்தில் சிலம்பரசன் நடிப்பதால் படத்தை விட்டு வெளியேறினார். மேலும் இந்த படத்தில் நடிக்க, ஜெயம் ரவி வழக்கமாக வாங்கும் சம்பத்தில் 10 சதவீதம் கூட தர இயக்குனர் மணிரத்னம் முன்வரவில்லை. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திலும் மிக குறைந்த சம்பளமே கொடுத்தார்.
அதனால், மணிரத்னம் இயக்குகிற படம், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு என முக்கியத்துவம் இருந்தும், தக்லைப் படத்தில் இருந்து விலகிவிட்டார் நடிகர் ஜெயம் ரவி. அதுமட்டுமின்றி இரண்டு முறை 30 நாட்கள், 30 நாட்கள் என கால்ஷீட் வாங்கி விட்டு, கடைசி நேரத்தில் கால்ஷீட் வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றனர். இப்படி தொடர்ந்து அவமானம் ஏற்பட்டதால் தக்லைப் படம் வேண்டாம் என விலகிவிட்டார் ஜெயம் ரவி.
இதற்கிடையே தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஆயத்தமானார். தனி ஒருவன் முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த ஆண்டு இறுதிக்குள் தனி ஒருவன் 2 படம் வெளியாக வேண்டும் என்று கண்டிசன் போட்டதால், தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த தனி ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார் ஜெயம் ரவி.
ஆனால் இந்த படத்துக்கான பட்ஜெட் ரூ. 120 கோடி என்று படத்தின் இயக்குனர் மற்றும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா கூறியதால், தொடர்ந்து பிளாப் படங்களை தந்துவரும் ஜெயம் ரவியை நம்பி, அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாது என, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் மறுத்து விட்டது. அப்படியே படத்தையும் கிடப்பில் போட்டு விட்டது.
இந்நிலையில், தனி ஒருவன் படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனர் மோகன் ராஜா, தனி ஒருவன் படத்தின் கதையை நான் நடிகர் பிரபாஸ்க்காக தான் எழுதினேன். ஆனால் அவர் அப்போது காதல் படங்களில்தான் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அதனால் அவரை வைத்து தனி ஒருவன் படம் எடுக்க முடியாததால், ஜெயம் ரவியை வைத்து எடுத்தேன் என்று கூறியிருக்கிறார். ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததே அந்த படம்தான். அதையும் இப்படி மொக்கை செய்துவிட்டாரே, என ஜெயம் ரவி ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.





