தமிழ் சினிமாவில் நடிப்பு ராட்சசி என்று நடிகர் கமல்ஹாசன் புகழ்ந்த ஒரு நடிகை யாரென்றால் அது ஊர்வசிதான். நடிகர் கமல்ஹாசனே புகழும் அளவுக்கு நடிப்பில் மிக யதார்த்தமாக, அழுத்தமாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஊர்வசி. முந்தானை முடிச்சு படம் துவங்கி, இன்று உள்ளொழுக்கு படம் வரை ஊர்வசி நடிப்பில் தனி ரகமாக, வேற லெவலில் இருந்து வருகிறார்.
மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழில், தெலுங்கில் சினிமாத்துறையில் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்து வருகின்றன என சீனியர் நடிககைள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகை ஊர்வசி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியதாவது, எல்லா மொழி திரையுலகிலும் இதுபோன்ற ஆண்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது என்பது கடினமானது. அப்படிப்பட்ட ஆண்களை பார்க்க போது தனியறைகளில் சந்திக்க கூடாது. பொது இடங்களில் சந்திப்பை வைத்துக்கொள்ளுங்கள். அல்லது துணைக்கு யாராவது உடன் அழைத்துச் செல்வது முக்கியம்.
மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற நிறைய சங்கடங்கள் இருக்கின்றன. ஒரு நடிகை ஒரு படத்தில் நடிக்கும் போது இயக்குனரை, நடிகரை அனுசரித்து செல்லவில்லை என்றால், வேறு விதத்தில் பழிவாங்கி விடுவார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம், எனக்கும் ஒரு படத்தில் நடித்த போது நடந்தது.
ஒரு தமிழ் படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஹீரோ, இயக்குனருடன் சேர்ந்துக்கொண்டு என்னை வேறுவிதமாக பழிவாங்கினார். ஒரு காட்சியில் ஒரு உயரமான இடத்தில் வரப்பின் மீது நான் நடந்து வருவது போல காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் என் முகம் கூட சரியாக தெரியாது. ஆனால் கேமராவை ஓடவே விடாமல் திரும்ப திரும்ப அந்த காட்சியில் என்னை அந்த இயக்குனர் நடிக்க வைத்தார்.
இதை கேமராவுக்கு பின் அமர்ந்து கவனித்துக்கொண்டு இருந்த அம்மா, தனியாக அழைத்து என்னிடம் உண்மையை சொன்னார். பிறகு அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் உதவியுடன் படப்பிடிப்பில் இருந்து தப்பித்து ஊர் வந்து சேர்ந்தோம். பிறகு நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனரும் இறந்துவிட்டதால், அவரது பெயரை சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ஊர்வசி.





