- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் சூரியும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிட்டாரா? கருடன் பற்றிய உண்மைத் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது...

கடைசியில் சூரியும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிட்டாரா? கருடன் பற்றிய உண்மைத் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது – இதெல்லாம் ரொம்பவும் அநியாயம்பா!

- Advertisement -

நடிகர் சூரி, காமெடி நடிகராக இருந்து ஹீரோ நடிகராக தமிழ் சினிமாவில் முன்னேறியிருக்கிறார். உண்மையில் அவரது வெற்றியும், சாதனையும் மிகவும் பாராட்டத்தக்கது. ஏனெனில், சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், துணை நடிகராக படங்களில் நடித்தவர் சூரி.

ஆரம்பத்தில் திருப்பூரில் 7 ஆண்டுகள் பனியன் கம்பெனி தொழிலாளியாக இருந்த அவரை, அவரது நண்பர் ஒருவர் சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்துள்ளார். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகர் சூரியே வெளிப்படையாக கூறியிருந்தார். அதுவும் திருப்பூர் பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் அருகில் தங்கி 7 ஆண்டுகள் பனியன் கம்பெனியில் வேலை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

துவக்கத்தில் வின்னர், தீபாவளி, காதல் போன்ற படங்களில் சில காட்சிகளில் நடித்த சூரிக்கு, வெண்ணிலா கபடிக்குழு படம்தான் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதனால் பரேோட்டா சூரி என்றே டைட்டில் கார்டில் போடப்பட்ட அவர், ஒரு கட்டத்துக்கு பிறகு பிரபல காமெடி நடிகராக மாறி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

முன்னணி நாயகர்களுடன் காமெடி செய்துக்கொண்டிருந்த சூரியை ஹீரோவாக்கிய பெருமை, இயக்குனர் வெற்றிமாறனையே சேரும். அவர்தான் விடுதலை படம் மூலம் அவரை குமரேசன் கேரக்டரில் கான்ஸ்டபிளாக நடிக்க வைத்து, சூரியின் நடிப்பாற்றலை திரையில் கொண்டு வந்தார், அதன்பிறகு விடுதலை 2 படத்திலும் சூரி, ஹீரோவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படம் வெளியானது. முதல் நாளில் 4 கோடி ரூபாய், 2வது நாளில் 6 கோடி ரூபாய் என ரூ. 10 கோடி வரை வசூல் குவித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 50 கோடி வரை வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஆனால், கருடன் படம் கன்னடத்தில் வந்த ஒரு படத்தின் அப்பட்டமான தழுவல் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது. காந்தாரா படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. அவரது நடிப்பில் 2021ம் ஆண்டில் வெளிவந்த கருடா காமன விருஷபா, வாகனா என்ற படத்தையே அப்படியே உல்டாவாக்கி, சில மாற்றங்களை செய்து, சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் நடிப்பில் கருடன் படத்தை தந்துள்ளனர். இதை அறிந்துக்கொண்ட நெட்டிசன்கள், பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்