- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல ஹீரோ வீட்டில் இருந்து நடிகை திரிஷாவுக்கு தினமும் சாப்பாடு, குந்தவையே பகிரங்கமாக வெளியிட்ட பதிவு,...

பிரபல ஹீரோ வீட்டில் இருந்து நடிகை திரிஷாவுக்கு தினமும் சாப்பாடு, குந்தவையே பகிரங்கமாக வெளியிட்ட பதிவு, போடு வெடிய – தரமான சம்பவமாக இருக்குதே!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில், 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகிகளாக நடித்துக்கொண்டு இருப்பவர்கள் இரண்டு பேர்தான். அதில் ஒருவர் திரிஷா, மற்ற ஒருவர் நயன்தாரா. இவர்கள் மட்டுமே 40 வயதுகளை கடந்தும் நாயகிகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். அதிகளவில் பல கோடிகளில் சம்பளமும் வாங்குகின்றனர்.

திருமணத்துக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அது உண்மை என்பது போல்தான், அவரது 75வது படம் அன்னபூரணிக்கு பிறகு தமிழில் இதுவரை நயன்தாரா நடித்த படங்கள் எதுவுமே வரவில்லை. ஆனால் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

- Advertisement -

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த பிறகு, குந்தவையாக ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து விட்டார் திரிஷா. விஜயுடன் லியோ படத்தில் நடித்த பிறகு, அஜீத்குமாருடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட்பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் நாயகியாக நடிக்கிறார்.

அத்துடன் மலையாள படங்கள் இரண்டில் கமிட் ஆகி திரிஷா பல மாதங்களாக நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற படத்திலும் திரிஷா நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் திரிஷா தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையே தி கோட் படத்தில், விஜயுடன் ஒரு குத்தாட்ட பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்.

- Advertisement -

படங்களில் மட்டுமின்றி, தெலுங்கில் பிருந்தா என்ற வெப்சீரிஸ் ஒன்றில் போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் திரிஷா 8 எபிசோடுகளில் நடித்திருக்கிறார். அந்த வெப் சீரிஸ் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் விசாரணை அதிகாரியாக திரிஷா நடிப்பு வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை திரிஷா அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன் மனம் கவர்ந்த விஷயங்களை, புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு பகிர்வது வழக்கம். அந்த வகையில் ஆந்திராவில் விஸ்வாம்ப்ரா ஷூட்டிங்கில் இருக்கும் திரிஷாவுக்கு, படத்தின் ஹீரோ நடிகர் சிரஞ்சீவி வீட்டில் இருந்துதான் தினமும் உணவு வருகிறது. விதவிதமான ருசியில், அறுசுவை உணவு சிரஞ்சீவி அனுப்பி வைக்கிறார். அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை திரிஷா.

- Advertisement -

சற்று முன்