- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படி ஒரு மெகா சொதப்பலா? - ரகசியத்தை...

மகாராஜா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படி ஒரு மெகா சொதப்பலா? – ரகசியத்தை யாராவது ஊரையே கூட்டி சொல்வாங்களா…- என்ன கொடும சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி பார்க்கப்படுகிறார். எந்த விதமான கேரக்டராக இருந்தாலும், அதில் தனது தனி முத்திரையை பதித்து விடுபவர். ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்தவிதமான நடிப்பிலும் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதை காட்டியிருக்கிறார்.

குறிப்பாக மாஸ்டர், விக்ரம், பேட்ட படங்களில் வில்லனாக அசத்தினார். பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் வேற லெவலில் அவரது நடிப்பு இருந்தது. தர்மதுரை, மாமனிதன், 96, றெக்க, காதலும் கடந்துப் போகும், ஆரஞ்சு மிட்டாய் படங்களும் அவரது நடிப்பை சொல்லியது.

- Advertisement -

அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை படத்தில் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பு வேற லெவலில் இருந்தது. படத்தின் நாயகன் சூரி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில், படத்தில் பேசிய கேரக்டர் விஜய் சேதுபதி தான். சில காட்சிகளே வந்தாலும் அதில் விஜய் சேதுபதி உயிர்ப்போடு தன்னை காட்டியிருந்தார். நிச்சயம் விடுதலை 2 விஜய் சேதுபதியின் புது பரிமாணமாக இருக்கும். இதற்கு இயக்குனர் வெற்றிமாறன் காரணமாக இருப்பார்.

ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு படவாய்ப்புகள் வெகுவாக குறைந்து போய் விட்டன. குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி என்ற படத்தில் அவர் நடித்த பிறகு, வேறு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வரவில்லை. இப்போதைக்கு விடுதலை 2 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

- Advertisement -

இதுதவிர அவரது 50வது படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பிரிமியர் ஷோ என்ற பெயரில் பல மாநிலங்களில், பல நாடுகளில் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த படத்தை பலருக்கும் ப்ரிவ்யூ ஷோ காட்டியுள்ளது.

நிச்சயமாக, இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ரகசியம் தரமான சம்பவமாக வேற லெவலில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தை பலரும் பார்த்து விட்டதால் படத்தின் கதை, கிளைமாக்ஸை வெளிப்படையாக கூறி வருகின்றனர். படம் வெளிவரும் முன்பே, படத்தின் கதை கிளைமாக்ஸ் ரகசியம் தெரிந்துவிட்டால், படத்தின் சுவாரசியமே போய்விடும் என்பதால் அது படத்தின் வெற்றியை கடுமையாக பாதிக்கும். இது தெரியாமல் படத்தை தொடர்ந்து திரையிட்டு, படக்குழு படத்தின் அபார வெற்றியை தடுக்க அவர்களே ஏற்பாடுகளை செய்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்