- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ஷூட்டிங் எப்போது? ரஜினி போலவே கமலும் கரெக்சன் சொன்னாரா?...

அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ஷூட்டிங் எப்போது? ரஜினி போலவே கமலும் கரெக்சன் சொன்னாரா? – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக்லைஃப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா அபிராமி நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக ரசிகர்களை ஏமாற்றியது.

குறிப்பாக இந்த படத்தில் திரிஷா நடித்த இந்திராணி கேரக்டர் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷாவை மிகவும் கம்பீரமாக நடிக்க வைத்திருந்த மணிரத்னம் இந்த படத்தில் திரிஷாவின் பிம்பத்தையே சின்னாபின்னமாக்கி சிதறடித்து விட்டார் என்றும் சினிமா விமர்சகர்கள் ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

தக்லைஃப் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இதுவரை எந்த படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துக்கொள்ளவில்லை. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்தும் கூட விலகிய கமல்ஹாசன், அமெரிக்காவில் 6 மாதங்கள் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துக்கொண்டார்.

அதன்பிறகு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படம் கமல் நடிக்கும் 237வது படம் என்றும் கூறப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். 3 மாதங்களில் முடிவடையும் குறுகிய கால படம். இந்த படத்தை கமலே சொந்தமாக தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் பல மாதங்கள் கடந்தும் இன்னும் அன்பறிவ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. இப்போது கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, இப்போது கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். தேர்தல் முடிந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அன்பறிவ் இயக்கும் படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருப்பதால் கொஞ்சம் குடும்ப பின்னணி கலந்த கதைக்களமாக திரைக்கதையை கொண்டு வருமாறு கமல்ஹாசன் அன்பறிவ் மாஸ்டர்களிடம் திருத்தம் கூறியிருக்கிறார். அந்த பணிகளும் நடந்து வருகிறது. கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் நடிக்கும் ரஜினியும் இப்படி அந்த கதையில் சில திருத்தங்கள் சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்