- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 8 லட்சத்தை ஸ்வாஹா செய்துவிட்டு கம்பி நீட்டிய டைரக்டர், பாதியில் நின்றுபோன படம்...

ரூ. 8 லட்சத்தை ஸ்வாஹா செய்துவிட்டு கம்பி நீட்டிய டைரக்டர், பாதியில் நின்றுபோன படம் – இந்த படத்துக்கு கதை வசனகர்த்தா விஜய் சேதுபதியாம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட படம் ராட்சசன். க்ரைம் திரில்லர் சப்ஜெக்ட் படமான இது, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ வில்லன் கேரக்டர்தான் இந்த படத்தின் மையக்கரு. இதில் வில்லன் நடிப்பில் மிரட்டியிருப்பார் நடிகர் சரவணன்.

ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன், கதாநாயகனாக நடிக்கும் படம் ஒளியும் ஒலியும். இந்த படத்துக்கு கதை வசனம், டயலாக் ரைட்டராக நடிகர் விஜய் சேதுபதி எழுதுகிறார். இந்த படத்தின் இயக்குநர் காரல்மார்க்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வந்திருக்கிறது.

- Advertisement -

படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில், படத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் தங்களது தினசரி பேட்டா வழங்கப்படவில்லை என, படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று புகார் கூறியிருக்கின்றனர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் அந்த ஷெட்யூல் செலவுக்காக, தினசரி பேட்டா உட்பட ரூ. 11 லட்சத்தை படத்தின் இயக்குநர் காரல் மார்க்ஸிடம் ஏற்கனவே கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், பேட்டா தங்களுக்கு வழங்கவில்லை என்று அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், படத்தின் இயக்குநரை அழைத்து பேசிய நிலையில், 8 லட்சம் ரூபாயை அவரே வைத்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது. 8 லட்சம் ரூபாய்க்கான செலவு கணக்குகளை கொடுங்கள் என, தயாரிப்பு தரப்பில் கேட்ட நிலையில் நாளை காலை கணக்கை ஒப்படைக்கிறேன் என்றும் டைரக்டர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அடுத்த நாள் காலை, படப்பிடிப்புக்காக யூனிட் முழுவதும் காத்திருக்க, இயக்குநர் வரவே இல்லை. பிறகு விசாரித்த போது இயக்குநர் திடீரென காணாமல் போனது தெரிய வந்தது. தயாரிப்பாளர் கொடுத்த ரூ. 8 லட்சத்துக்கு கணக்கு கேட்டதால், அவர் எஸ்கேப் ஆனது தெரிய வந்தது. இது ஏப்ரல் மாதம் நடந்த நிலையில், அத்துடன் படமும் பாதியில் நின்றுபோனது.

இதுகுறித்து டைரக்டர் யூனிட் மற்றும் தயாரிப்பு கவுன்சிலில் புகார் அளித்தும் இதுவரை இதற்கான தீ்ரவு எதுவும் கிடைக்கவில்லை. படமும் பாதியில் நின்றுவிட்டது. ராட்சசன் படத்தில் சிறந்த நடிப்பை தந்த சரவணன், இந்த படத்தில் ஹீரோவாக ஒரு நல்ல படைப்பை தந்திருப்பார். விஜய் சேதுபதி கதை வசனமும் படத்தை வேற லெவலில் கொண்டு போயிருக்கும். இப்படி பாதியில் படம் நின்று போனது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான்.

- Advertisement -

சற்று முன்