- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் எப்படி இருக்கு? இயக்குனராக ரசிகர்களின் மனங்களை வென்றாரா...

நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் எப்படி இருக்கு? இயக்குனராக ரசிகர்களின் மனங்களை வென்றாரா தனுஷ்? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

- Advertisement -

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் இட்லி கடை. நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து அவரே டைரக்ட் செய்திருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் தனுஷ் இயக்கிய 4வது படம் இட்லி கடை. இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன் நடித்திருக்கிறார்.

மேலும் ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் சமுத்திரக்கனி இளவரசு ஷாலினி பாண்டே மற்றும் வில்லன் கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கின்றனர். வழக்கமான ஆக்சன் கதைக்களத்தில் இருந்து விலகி சென்டிமென்ட் எமோஷனல் கதையில் இந்த படத்தை இயக்குனர் தனுஷ் தந்திருக்கிறார். தந்தை -மகன் பாசத்தை இந்தமுறை கையில் எடுத்திருக்கிறார். தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இட்லி கடை படத்தின் கதை என்னவென்றால் தேனி பக்கத்தில் ஒரு கிராமத்தில் ராஜ்கிரணுக்கு மகனாக பிறக்கிறார் தனுஷ். ராஜ்கிரண் அந்த ஊரிலேயே ஒரு இட்லி கடை நடத்துகிறார். அந்த இட்லி கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தனக்கு பிறகு தனது மகன் தனுஷ் இந்த கடையை நடத்த வேண்டும் என்று ராஜ்கிரன் விரும்புகிறார். ஆனால் தனுஷ் இட்லி கடையை மறந்துவிட்டு பாங்காங்கில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ள சத்யராஜின் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷூக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர்கள் திருமணம் நடக்க சில நாட்களே உள்ள போது ராஜ்கிரண் திடீரென இறந்து விடுகிறார். தந்தை ராஜ்கிரண் மறைவுக்கு பின் மகன் தனுஷ் பாங்காங்கில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு திரும்பி வருகிறார். அங்கு அவர் தனது தந்தையின் ஆசைபடி இட்லி கடையை மீண்டும் நடத்துகிறாரா? அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதுதான் இட்லி படத்தின் கதை.

- Advertisement -

சொந்த ஊரை மறந்து வெளியூரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இட்லி கடை படம் கனெக்ட் ஆகும் என்று கூறப்படுகிறது. வெளியூரில் வாழ்ந்தாலும் தங்களது சொந்த ஊரை உறவினர்களை குடும்ங்களை மறக்கக்கூடாது என்று தனுஷ் இந்த படத்தில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். முதல் பாதியில் இடைவேளை வரை கொஞ்சம் சுவாரசியமாக படம் செல்கிறது. 2ம் பாதியில் அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்ற சுவாரசியமே படத்தில் சிறிதும் இல்லாமல் கொட்டாவிகளை ரசிகர்கள் விட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

படத்தில் வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு உறுத்தலாக உள்ளது. இன்னும் அந்த காட்சிகளை நேர்த்தியாக செய்திருக்கலாம். 2ம் பாதியில் வரும் சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளை ரொம்பவும் தூக்கலாக வைத்ததால் பல காட்சிகள் மிகையாக உள்ளது. ஓவர் பில்டப்பா இருக்குதே, பூமர் அங்கிள் மாதிரி நம்மை ஆக்கிட்டாங்களே என்று பலரும் வாய்விட்டே புலம்புகின்றனர். அந்தளவுக்கு சென்டிமென்ட் காட்சிகளில் நெஞ்சை பிழிந்து விட்டனர். வழக்கமான பழைய புளித்த மாவு கதை தான். சூர்யவம்சம் தேவயானி ஸ்டைலில் இட்லி உப்புமா கிண்டி விற்றாலும் இட்லி கடைக்கு பெரிய லாபம் கிடைக்காது என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்