தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்தாலும் அதில் 13 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையாக இருந்தன. அதனால் பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயரை 30 ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கர் பெற்றுவிட்டார்.
கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வௌியான இந்தியன் 2 தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளியான கேம்சேஞ்சர் ஆகிய படங்கள் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பலத்த தோல்வியை சந்தித்தது. வழக்கம் போல ஊழல் மட்டுமே படத்தின் மையக்கருவாக இருந்ததும் திரைக்கதை சொதப்பலும் இந்த படங்களுக்கு தோல்வியை தந்தன.
இந்நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்கிற வரலாற்று நாவலை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாகுபலி பொன்னியின் செல்வன் போல இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வும் ரகசியமாக நடந்து வருகிறது.
இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க தமிழ் தெலுங்கு தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத நிலையில் இப்போது மும்பையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் பென்மீடியா இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. ஆனால் முக்கியமான கண்டிஷன் ஒன்றுடன் இந்த படத்தை தயாரிக்க அந்த நிறுவனம் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வழக்கமாக இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கும் படத்தின் பட்ஜெட்டை இவ்வளவுதான் என்று சொல்ல மாட்டார். அதே போல் படத்தின் கால அளவு அதாவது படப்பிடிப்புக்காக மொத்த கால அவகாசம் குறித்தும் அவர் தெரிவிப்பது இல்லை. ஆனால் பென் மீடியா நிறுவனம்தான் அந்த விஷயத்தில்தான் இப்போது ஷங்கருக்கு செக் வைத்துள்ளது.
வேள்பாரி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் படத்தை ஆரம்பித்து முடிக்க எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் குறித்த கால அவகாசம் குறித்து தங்களுக்கு எழுத்துபூர்வாக எழுதித் தர வேண்டும் என்று ஷங்கரிடம் அந்த நிறுவனம் கட் அண்ட் ரைட்டாக தெரிவித்துள்ளது. இதற்கு ஓகே சொன்ன இயக்குனர் ஷங்கர் கடந்த 15 நாட்களாக தனது மேனேஜருடன் இணைந்து படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்து வருகிறார்.





