- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 ஹீரோக்களை போல நானும் சினிமாவில் ஜெயித்துக் காட்டுவேன், நடிகர் சாந்தனு ஆவேசம் -...

அந்த 3 ஹீரோக்களை போல நானும் சினிமாவில் ஜெயித்துக் காட்டுவேன், நடிகர் சாந்தனு ஆவேசம் – உங்க அப்பாவே பெரிய ஆள்தான் ப்ரோ…

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக சினிமா கற்று பிறகு சினிமாவில் நடிகராக இயக்குனராக இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக புகழ் பெற்றவர் கே பாக்யராஜ். கடந்த 1980 – 90களில் தமிழ் சினிமாவில் பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது அறிமுகத்தில் ஊர்வசி கவுண்டமணி செந்தில் லிவிங்ஸ்டன் பார்த்திபன் என பலர் சிகரம் தொட்டனர்.

நடிகர் பாக்யராஜ் – பூர்ணிமா நட்சத்திர தம்பதியின் ஒரே மகன் சாந்தனு. தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் கதாநாயகனாக அறிமுகமானவர். கடந்த 2008ம் ஆண்டு சாந்தனு நடித்த சக்கரக்கட்டி என்ற படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆக இருந்தும் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

அதன்பிறகு இப்போது வரை 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக நடிகர் சாந்தனு தொடர்ந்து போராடி வருகிறார். தொடர்ந்து அவர் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தாலும் அந்த படங்கள் அவருக்கு பெரிய திருப்புமனை படங்களாக அமையவில்லை. சாந்தனுவின் அப்பா இயக்குனர் பாக்யராஜ் பல நட்சத்திர நடிகர்களை உருவாக்கியவர்.

இதற்கிடையே தனது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகர் அந்தஸ்தை இன்னும் பெறவில்லையே என்ற வருத்தத்தில் அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் ஷேன் நிகாமுடன் இணைந்து பல்டி என்ற படத்தில் நடிகர் சாந்தனு நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை வெற்றியை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சாந்தனு கூறியதாவது, நடிகர்கள் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் மற்றும் மணிகண்டன் போன்றவர்கள் சினிமாவில் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக கற்று மேலே வந்தவர்கள். என்னிடம் அந்த கற்றல் மனப்பான்மை இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்த ஹீரோக்களை முன்னுதாரணமாக கொண்டு அடிமட்டத்திலிருந்து உழைத்து மேலே வரவேண்டும் என இப்போது நான் உழைக்க தொடங்கியுள்ளேன் என்று நடிகர் சாந்தனு அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருக்கிறார். இந்த 3 நடிகர்களை காட்டிலும் உங்கள் அப்பா கே பாக்யராஜ் சினிமாவில் தனது உழைப்பால் திறமையால் அறிவாற்றலால் அடி மட்டத்திலிருந்து உயர்ந்து முன்னுக்கு வந்தவர். இன்றும் கொண்டாடப்படும் ஒரு நட்சத்திர கலைஞராக இருக்கிறார் என்பதை சாந்தனு மறந்து விட்டாரே என்று ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்
.

- Advertisement -

சற்று முன்