- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்திற்கு முன்னதாகவே ரஜினிக்கு வெளியாகும் மற்றொரு திரைப்படம்... காலரை தூக்கிவிட்டு கொண்டாடத் தயாராகும் சூப்பர்...

கூலி படத்திற்கு முன்னதாகவே ரஜினிக்கு வெளியாகும் மற்றொரு திரைப்படம்… காலரை தூக்கிவிட்டு கொண்டாடத் தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்….

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தில், முந்தைய பாகத்தில் இடம் பெற்ற பெரும்பாலான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதுபோக, தெலுங்கு நடிகர் பாலையா படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் கேமியோ ரோலில் நடிப்பதாகவும், அவர் வரும் காட்சிகள் திரையரங்குகள் ரணகளம் ஆகும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க ரஜினி நடித்த கூலி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அதற்கான பணிகளை தற்போது வேகமாக செய்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அமீர்கான் நாகர்ஜூனா உபேந்திரா சத்தியராஜ் ஸ்ருதிஹாசன் சௌபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு, மோனிஷா ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தன.

தங்கக் கடத்தலை மையப்படுத்தியே இந்த திரைப்படம் நகரும் என்று சொல்லப்படுகிறது. படத்தில் கேங்ஸ்டர் ஆக இருந்து கூலியாக மாறிய தேவா என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பதாக சொல்கிறார்கள். தனது பழைய கேங்கை அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, தங்க வாட்சுகளை கைப்பற்ற முயற்சி செய்வதும், அதற்குப் பின்னால் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களும்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துள்ள சூழலில், ரஜினி ரசிகர்களுக்கு தெம்புட்டும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும் பாட்ஷா திரைப்படம் தான் மீண்டும் ரி-ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரசிகர்களின் ஃபேவரட்டாக இன்றும் இருக்கும் இந்த திரைப்படம், வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம். இப்போதும் இந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதைப் பார்ப்பதற்கென தனி கூட்டம் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பாட்ஷா ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்