- Advertisement -
இயக்குனர் பிஆர் பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்டி ராமராவ் சாவித்திரி தேவிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கர்ணன். இந்த திரைப்படம் பெங்களூரு அரண்மனையில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம். அங்கு பலருக்கும் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கர்ணனின் கதைக்காக முதன்முறையாக அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 5 ஆயிரம் ரூபாயாக இருந்த தினசரி வாடகை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பின்னர் சந்திரமுகி படத்தின் சில காட்சிகளும் இங்கு தான் படமாக்கப்பட்டன. கர்ணன் படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





