தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வருகிறது. இருந்தாலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான “பிரின்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்திருந்தால் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பெரிய அளவில் நம்பி இருந்தார். அதோடு மாவீரன் பட இசை வெளியீட்டு விழாவின் போது கூட கடந்த படத்தில் விட்டதை இம்முறை விட மாட்டேன் என கூறியிருந்தார்.

மண்டேலா படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான மாவீரன் படமானது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி இன்றுடன் ஐந்து நாட்களான நிலையில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாவீரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. இப்படி அவர் இந்த படத்தில் நடிக்காமல் இருந்தாலும் பின்னணி குரலை கொடுத்தது குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் சில விடயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு இதற்காக அவர் ஒரு ருபாய் கூட வாங்காமல் எங்களுக்காக செய்திருந்தார்.
நானும் சிவகார்த்திகேயனும் இண்டஸ்ட்ரீயில் முதல் முறையாக இது போன்ற ட்ரெண்ட்டை ஆரம்பிப்பதில் பெருமை அடைகிறேன். அதோடு விஜய் சேதுபதி : சிவகார்த்திகேயனுக்காக இதனை செய்வதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறி சம்பளமே இல்லாமல் பின்னணி குரலை கொடுத்துள்ளார் என மடோன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.





