- Advertisement -
Homeபொழுதுபோக்குவீரதீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம் - பஞ்சாயத்து...

வீரதீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம் – பஞ்சாயத்து பேசி படத்தை வெளியிட முயற்சிக்கும் படக்குழு!

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவான படம் வீர தீர சூரன். பண்ணையாரும் பத்மினியும், சித்தா ஆகிய படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கிய இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த நிலையில் இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ரியோ சிபு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் படம் தியேட்டர்களில் ரிலீஸ் இதுவதர ஆகவில்லை. வீர தீர சூரன் படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தை வெளியிட தடை பெற்றது.

- Advertisement -

அதனால் இந்த படம் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். வீரதீர சூரன் படத்தில் முதலீடு செய்திருந்த அந்த நிறுவனம் ஓடிடி உரிமையை தனது வசம் வைத்திருக்கிறது. ஓடிடி வியாபாரம் நடப்பதற்கு முன்பே வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் அறிவித்து விட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை. அதற்கான நஷ்ட ஈட்டை தயாரிப்பாளர் தர வேண்டும் என்று அந்த நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் வீர தீர சூரன் படத்தை இன்று காலை வரை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதுகுறித்து நேற்று இரவு வரை தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காலையில் தடையை நீக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் விக்ரமும் படத்தை வெளியிட பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வந்தார் அதனால் வீர தீர சூரன் படம் இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியாகும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் படத்தின் வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் அப்போது படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. படம் தற்போது வரை தியேட்டர்களுக்கு வரவில்லை. இதனால் விக்ரம் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இதற்கிடையே இந்த பிரச்சனை குறித்து இரு தரப்பினரும் பேசி முடிவெடுத்து நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது ஒரு வேளை இதில் சுமூகத் தீர்வு ஏற்படும் பட்சத்தில் வீர தீர சூரன் படம் இன்று மாலையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இல்லையெனில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

சற்று முன்