- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? தட்டித் தூக்கிய தளபதி விஜய்,...

தி கோட் படம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? தட்டித் தூக்கிய தளபதி விஜய், காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் வெங்கட்பிரபு – அப்போ அந்த கனவு பலித்து விடுமா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. தமிழக அரசிடம் 2 நாட்கள் சிறப்பு காட்சிகளுக்கு தி கோட் படம் தயாரிப்பாளர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டது. அதனால் படம் ரிலீஸ் முதல் நாளில் 5 காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்று தி கோட் படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 1150க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழ்நாட்டிலும், கேரளாவில் 700 திரைகளில் 4000 காட்சிகளுக்கும் அதிகமாகவும் தி கோட் திரையிடப்பட்டது. உலகம் முழுவதும் மொத்தம் 6000 திரைகளில் தி கோட் நேற்று ரிலீஸாகி உள்ளது.

- Advertisement -

படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் படமாக விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும், பொதுவான சினிமா பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் தி கோட் இருக்கிறது என்று முதல் நாள் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மகன் விஜய் கேரக்டரில் தளபதி நடிப்பில் தாண்டவம் ஆடியிருக்கிறார் என்று பாராட்டப்படுகிறார்.

கடந்த ஆண்டில் வெளியான லியோ படம், லோகேஷ் கனகராஜ் அதுவரை இயக்கிய படங்களில், மிக மொக்கையான படம் என்ற விமர்சனத்தை பெற்றது. கைதி, மாஸ்டர், லியோ என அவரது படங்களில் வன்முறை, ரத்தம், கொலைவெறி என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள், ரசிகர்களுக்கு தவறான பாதையை காட்டுவதாகவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் தி கோட் படத்தில் ஜனரஞ்சகமான விஷயங்களை வைத்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக வெங்கட்பிரபு திரைக்கதை அமைத்திருப்பதும் 3 மணி நேரம் படத்தின் நீளமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் படம் வேகமாக செல்வதால் பெரிய அளவில் ரசிகர்களுக்கு சோம்பல், அலுப்பு தட்டவில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி முதல் நாளான நேற்று ரூ. 95 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே சதமடிக்கும் நிலைக்கு தயாரான தி கோட் படம் இன்னும் சில வாரங்களில் அவர்களது வசூல் இலக்கு ரூ. 1000 கோடியை எட்டி விடுமா, என்ற எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஒருவேளை இந்த கனவு பலித்தால் தமிழ் நடிகர்களில் ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைத்த முதல் நடிகராகவும் தளபதி விஜய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

சற்று முன்