- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் கற்றுக்கொடுத்த மிக மோசமான பாடம், முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட நடிகர் விஜய் - கோட்...

லியோ படம் கற்றுக்கொடுத்த மிக மோசமான பாடம், முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட நடிகர் விஜய் – கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்). இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் துவங்கியுள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த நடிகர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

நடிகர் விஜய் இதுவரை 67 படங்களில் நடித்துள்ள நிலையில், 68 வது படமாக கோட் படம் வெளிவருகிறது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் விஜய், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

வருகிற செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அந்த பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு மேற்கொண்டு வருகிறார்.

படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பாக, கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா, எப்போது நடக்கும் என்ற பலத்த ஆர்வம் விஜய் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடக்குமா அல்லது வெளிநாடு ஏதேனிலும் நடக்குமா என்று ஒரு பரபரப்பான கேள்வி இருந்து வந்தது. ஏனெனில் கடந்த முறை லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு, பிறகு அங்கு நடத்தபடவில்லை.

- Advertisement -

ஒரு கட்டத்தில்,லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்த முடிவாகி, ஏற்பாடுகளை செய்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்த விழாவுக்கு அனுமதி மறுப்பதாக தமிழக அரசும், போலீஸ் துறையும் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டது. அதனால் அப்படி ஒரு விழாவே நடத்தாமல் ரத்து செய்யப்பட்டது. படம் வெளியான பிறகு, வெற்றி விழா மட்டுமே நடத்தப்பட்டது.

இந்நிலையில், கோட் படம் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் நடக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய், படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் வெங்கட்பிரபு உள்பட படத்தில் நடித்த திரை நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர். லியோ படத்தை போல, கோட் படம் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த தடையும் வந்துவிடக் கூடாது என, மலேசியாவில் நடத்த விஜய் மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்