- Advertisement -
Homeபொழுதுபோக்குதரமான சம்பவம் ரெடியாக இருக்கும் தளபதி, வரும் 5ம் தேதி முதல் நாளில் இத்தனை ஆயிரம்...

தரமான சம்பவம் ரெடியாக இருக்கும் தளபதி, வரும் 5ம் தேதி முதல் நாளில் இத்தனை ஆயிரம் காட்சிகளா? – அதிகாலை 4 மணி கொண்டாட்டத்துக்கு தயாரான கேரளா விஜய் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி வியாழன் அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இதில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடியாகும். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார்.

அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதில் 23 வயது இளைஞராக, டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜய் மகன் ரோலில் நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் இந்த படத்தில் வருகின்றனர். கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து இதுவரை 4 சிங்கிள்கள் வெளியிடப்பட்டுள்ளன. விசில் போடு, சின்ன சின்ன கண்ணில், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு மற்றும் மட்ட என 4 பாடல்கள் வெளியான நிலையில், மட்ட பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் அந்த பாட்டை பார்த்துள்ளனர்.

இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் தி கோட் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. லியோ படத்துக்கு பிறகு 11 மாதங்கள் கழித்து இந்த படம் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் காட்சி ரிலீஸ் ஆகிறது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரளா மாநிலத்தில் தி கோட் படத்துக்கு அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு கேரளம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தி கோட் படத்தை முதலில் பார்க்கப் போவது கேரளா ரசிகர்கள்தான். அதே நேரத்தில் கேரளா எல்லை பகுதியில் உள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா சென்று அதிகாலை 4 மணி காட்சி பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேரளாவில் வரும் 5ம் தேதியன்று மொத்தம் 700 தியேட்டர்களில் தி கோட் படம் திரையிடப்படுகிறது. அன்று ஒரு நாளில் மட்டும் தி கோட் 4000 காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதனால் கேரளாவில் முதல் நாளில், முதல் காட்சியில் அதிக திரைகளில் தி கோட் படம் திரையிடப்படுகிறது என்ற சாதனையை படைக்க உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ கோகுலம் முவீஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சற்று முன்