- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு வெடிய, த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு...

போடு வெடிய, த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு – ஜஸ்ட் இன்னும் ஒரு 146 நாட்கள்தான், வெயிட் பண்ணுங்க பாஸ்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்த படத்தை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்போது அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, ரஷ்யா நாட்டில் மாஸ்கோவில் நடந்து வருகிறது.

த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டை் (கோட்) படத்தில் நடிகை சினேகா, நடிகை மீனாட்சி சவுத்ரி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையில் அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அதே போல் நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லியோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை, அதிருப்தியை தந்த படமாக லியோ இருந்ததால், இந்த படத்தை மிகச்சிறப்பாக கொடுக்க விஜய், வெங்கட்பிரபு கூடுதல் கவனம் எடுத்து பணியாற்றி வருகின்றனர்.

சென்னை, திருவனந்தபுரம், ஐதராபாத், துருக்கி, ரஷ்யா என தொடர்ந்து படப்பிடிப்புகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது 95 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவில் இன்னும் இரு வாரங்களுடன் படப்பிடிப்பை நிறைவு செய்யும் படக்குழு அதன்பிறகு சென்னை திரும்புகிறது. பிறகு படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை இயக்குனர் வெங்கட்பிரபு முழு வீச்சில் கவனிக்க இருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே கோட் படம் எப்போது ரிலீசாகும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் பல முக்கிய படங்கள் இப்போது திரைக்கு வர தயாராக இருக்கின்றன. அந்த வகையில் கமல் நடித்த இந்தியன் 2, ரஜினி நடித்த வேட்டையன், விக்ரம் நடி்தத தங்கலான், துருவ நட்சத்திரம், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 என பல படங்கள் களத்துக்கு வர உள்ளன.

முதலில் கோட் படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, ரிலீஸ் செய்து திரையிட திட்டமிட்டிருந்த நிலையில், அன்று புஷ்பா 2 வெளியாவது முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே வருகிற செப்டம்பர் 5ம் தேதி த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை, சரியாக 146 நாட்கள் விஜய் ரசிகர்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

- Advertisement -

சற்று முன்