- Advertisement -
Homeபொழுதுபோக்குசூடாக சூட்டிங்கை ஆரம்பித்த சுதா கொங்கரா... கல்லூரி மாணவர் கெட்டப்பில் கலக்கலாக இருக்கும் சிவகார்த்திகேயன்... படத்தின்...

சூடாக சூட்டிங்கை ஆரம்பித்த சுதா கொங்கரா… கல்லூரி மாணவர் கெட்டப்பில் கலக்கலாக இருக்கும் சிவகார்த்திகேயன்… படத்தின் ஒன்லைன் இதுதானாம்…

- Advertisement -

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் தான் சுதா கொங்கரா. இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் துரோகி. விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடித்த இந்த திரைப்படம் தோல்வியடைந்தது. இதனால், அடுத்த திரைப்படத்தில் நிச்சயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் சுதா கொங்கரா.

 

- Advertisement -

இதற்காக பொறுமையாக கதை எழுதிய அவர், மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கினார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேசமயம் யார் இந்த சுதா கொங்கரா என தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது.

 

- Advertisement -

இதன்பிறகு சூர்யாவுடன் இணைந்த அவர் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். கொரோனா காரணத்தால் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல், ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த சூர்யா, இதற்காக தேசிய விருதை பெற்றார்.

 

அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்க்கும் தேசிய விருது கிடைத்தது. இதன் பிறகு தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே இருந்தார் சுதா. ஒரு நாள் திடீரென அவர் மீண்டும் சூர்யாவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என டைட்டிலும் வைக்கப்பட்டது. சூர்யாவின் 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இதனை தயாரிப்பதாக தெரிவித்தது.

 

இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகினார் சூர்யா. ஆனால் இது குறித்த விளக்கத்தை சூர்யா தரப்பில் இருந்தோ அல்லது சுதா கொங்கரா தரப்பில் இருந்தோ இதுவரை தெரிவிக்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தனது புறநானூறு கதையை, சிவகார்த்திகேயனிடம் கூறி ஓகே வாங்கி விட்டார் சுதா கொங்கரா.

 

படத்தில் அவருடன் ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா, அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக இது உருவாகிறது. இதற்காக கல்லூரி மாணவர் கெட்டப்பில் அவர் வருகிறார். இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிரான படமாக இது உருவாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்