- Advertisement -
Homeபொழுதுபோக்குலக்கி பாஸ்கர் 2ம் பாகமாக உருவாகிறதா? இயக்குனர் வெங்கி அட்லூரி தந்த சூப்பர் அப்டேட் -...

லக்கி பாஸ்கர் 2ம் பாகமாக உருவாகிறதா? இயக்குனர் வெங்கி அட்லூரி தந்த சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் குஷி!

- Advertisement -

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எப்போதுமே ரசிகர்கள் அலட்சியம் செய்வதில்லை. ஒரு திரைக்கதை நேர்த்தியாகவும் ரசிக்கும்படியாகவும் ரசிகர்களின் மனங்களை கவரும் விதமாகவும் அமைந்துவிட்டால் நிச்சயமாக அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று விடுகிறது.

அந்த வரிசையில் நடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் லக்கி பாஸ்கர். மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் படத்தை தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி, முக்கிய கேரக்டரில் நடிகர் ராம்கி உள்ளிட்டோர் நடித்திருந்தார்.

- Advertisement -

ஒரு வங்கியில் பணிபுரியும் துல்கர் சல்மான் குடும்ப வறுமை காரணமாக வங்கி பணத்தை முறைகேடாக எடுத்து கையாடல் செய்து பெரிய அளவில் பணக்காரராக மாறுவது தான் இந்த படத்தின் கதை. இந்தியாவில் வர்த்தகம் பங்குச்சந்தை, அதில் நடக்கும் கோல் மால் என இந்த படத்தை ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் ரசிக்கும் படியாக வெங்கி அட்லூரி தந்திருந்தார். படத்தின் நாயகன் துல்கர் சல்மான் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்த படம் இரண்டாம் பாகமாக உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு இடையே தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை ஏற்கனவே இயக்கிய வெங்கி அட்லூரி அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெங்கி அட்லூரியிடம் லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கி அட்லூரி, லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம்பாகம் நிச்சயமாக எடுக்க போகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த படம் இப்போதைக்கு உடனடியாக தொடங்காது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

அதற்கு முன்பாக நான் கமிட்டான வேறு சில படங்களின் பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. மேலும் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இரண்டாம் பாகத்தை சரியான முறையில் பல கோணங்களில் ஆராய்ந்து கதையை எழுத வேண்டும். அதற்கு தான் இந்த அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்